Abstract:
"கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் வறுமை : மெதகந்தை மற்றும் பூண்டுலோயா வடக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையேயான ஒப்பீட்டு ஆய்வு" எனும் தலைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வானது இருவேறுபட்ட கிராமசேவகர் பிரிவுகளில் வறுமை நிலையினை ஒப்பீட்டாராய்தல் என்பதனை பிரதான நோக்கமாக கொண்டு மெதகந்தை (469C) மற்றும் பூண்டுலோயா வடக்கு (468E) கிராமசேவகர் பிரிவில் காணப்படும் மக்கள் ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட நோக்கங்களை அடையும் பொருட்டு முதலாம் நிலைத்தரவுகளிலிருந்து வினாக்கொத்து முறையினூடாக மொத்தக் குடும்பங்களில் இருந்து 14 சதவீத அடிப்படையில் 100 வினாக்கொத்துக்கள் எளிய எழுமாற்று மாதிரியினூடாக வழங்கப்பட்டு தேவையான தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நேர்காணல், நேரடி அவதானிப்பு, குழு கலந்துரையாடல் மூலமும் ஆய்வுகளத்தில் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டாம் நிலைத்தரவுகளும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் அளவை ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளன. இதற்காக Excel மென்பொதி பயன்படுத்தப்பட்டு வரைபடங்கள், அட்டவணைகள் மூலம் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ArcGIS 10.3.1 மூலமாக ஆய்வு பிரதேசம், வறுமையின் பரம்பல் பாங்கு போன்றவை படமாக்கப்பட்டுள்ளன. மெதக்கந்தை பகுதியில் கூலி தொழிலில் ஈடுபடுபவர்கள் 30 சதவீமாகவும் பூண்டுலோயா வடக்கில் 8 வீதமாகவும் காணப்படுவதுடன், மெதக்கந்தையில் வறுமையில் இருந்த மீளமுடியாமைக்கு வருமானக்குறைவு காரணம் என்பது 48 வீதமாகவும் பூண்டுலோயா வடக்கில் 37 லீதமாகவும் காணப்படுவதையும் அறியமுடிந்தது. மெதகந்தை பகுதியில் வருமானத்தினை நோக்கும் போது 22 சதவீதமானவர்கள் 3000 க்கு கீழ் வருமானம் பெறுபவர்களாகவும், பூண்டுலோயா வடக்கு பகுதியில் 6 சதவீதமானவர்கள் 3000 க்கு கீழ் வறுமானம் பெறுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாய்வின் ஊடாக மெதக்கந்தை கிராம சேவகர் பிரிவானது பூண்டுலோயா வடக்கு கிராம சேவகர் பிரிவினை விட அதிக வறுமை காணப்படும் பகுதியாக அடையாளப்படுத்த முடிந்தது