Abstract:
இடப்பெயர்வு என்பது பல்வேறு காரணங்களுக்காக தனிநபர்கள் மற்றும் மக்கள் முழுக்கள் தங்கள் வீடுகளை விட்டு நிரந்தரமாகவோ அல்லது தங்காலிகமாகவோ உள்ளூர் அல்லது வெளி நாடுகளுக்கு வெளியேறும் ஒரு செயன்முறையாகும். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பெரும்பாலான மக்கள் தமது பிரதேசங்களில் தமது சுயத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய இடங்களை நோக்கி இடப்பெயர்வினை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக குடித்தொகையில் வீழச்சி ஏற்படுகிறது. குடித்தொகை வீழ்ச்சி ஏற்படுவதால் சமூக, பொருளாதார ரீதியில் தாக்கங்கள் ஏற்பட்டு, பிரதேசத்தின் அபிவிருத்தி தடைபடுகிறது. இதன் காரணமாக இப்பிரதேச மக்களை பாதிக்கும் இடப்பெயர்வுடன் தொடர்பான சிக்கல்கள் வெளிவராது உள்ளது. கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இடப்பெயர்வின் போக்கிளையும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மாற்றங்களையும் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்காக முதலாம் நிலைத்தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகள் வினாக்கொத்து, கலந்துரையாடல் மூலமும், இரண்டாம் நிலைத்தரவுகள் அறிக்கைகள், புத்தகங்கள் என்பவற்றிலிருந்தும் பெறப்பட்டுள்ளது. ArcGIS 10.3.1 மென்பொருளினை பயன்படுத்தி இய்வு பிரதேசத்தின் குடித்தொகை அடர்த்தி, இடப்பெயர்வு போக்கு என்பன கண்டறியப்பட்டுள்ளன. Excel மென்பொருளினைப் பயன்படுத்தி வரைபுகள், வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் கொத்மலை பிரதேச செயலகப்பிரிவின் கடந்தகால மற்றும் தற்கால இடப்பெயர்வு போக்கு பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு ஆண்டுகளுக்கும் இடையில் இடப்பெயர்வு காரணமாக குடித்தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில் 10,235 பேர் ஆய்வு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். 2020ஆம் ஆண்டில் 11,258 பேர் ஆய்வு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இதில் 5725 ஆண்களும், 5533 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 2022ஆம் ஆண்டில் 15,326 பேர் ஆய்வு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இதில் 5357 ஆண்களும், 7383 பெண்களும் இடம்பெயர்ந்துள்ளனர். இத்தரவுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு பிரதேசத்தில் மக்கள் இடப்பெயர்வு அதிகரித்துக்கொண்டு செல்கின்றமையினை காண முடிகிறது. இதன் காரணமாக ஆய்வு பிரதேசத்தில் சமூக, பொருளாதார ரீதியில் பல தாக்கங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை குறைப்பதற்காக சேவை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை ஆய்வு பிரதேசத்தில் ஏற்படுத்தி, பிரதேசத்தில் மனிதவளத்தின் தேவை, இடப்பெயர்வினால் ஆய்வு பிரதேசத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்