dc.description.abstract |
இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் செறிவாக விவசாயம் இடம்பெறும் மாவட்டமாக உள்ளது. ஆயினும் அண்மைக்கால காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிதீவிர வானிலை மாற்றத்தின காரணமாக அடிக்கடி வெள்ளப்பெருக்கு வறட்சி ஏற்படுவதும் அதனால் பயிர் அழிவு ஏற்படுவதும் அல்லது பயிர்விளைவு குறைவடைவதும் அதிகரித்து வருகின்றது. இவ்வாய்வானது வெள்ள இடரினால் நெற்பயிர்ச் செய்கையில் ஏற்படும் தாக்கத்தினை ஆய்வு செய்வதளை பிரதான நோக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக புவியிடத் தகவல் நுட்பமுறையினைப் பயன்படுத்தி வெள்ள இடர் அதிகளவில் ஏற்படும் பகுதிகள் மற்றும் வெள்ளஆபத்துப் பகுதிகளை அடையாளப்படுத்துதல் அவற்றை படமாக்குதல் அதன்மூலம் வெள்ளத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கான வழிவகைகளக் கண்டறில் முதலானவற்றை முக்கிய நோக்காகக் கொண்டு இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முதலாம் மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம்நிலைத் தரவுகள் வினாக்கொத்து, முக்கியஸ்தர் நேர்காணல், நேரடி அவதானிப்புக்கள் மூலம் பெறப்பட்டு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம்நிலைத் தரவுகள் பல்வேறு அரச திணைக்களங்களிலிருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்தவகையில் கொழும்பு வளிமண்டலத திணைக்களத்திலிருந்து 32 வருடங்களுக்கான (1991-2020) மாதாந்த மழைவீழ்ச்சித் தரவுகள் இரணைமடு, கரியாலைநாகபடுவான், அக்கராயன், ஒட்டுகட்டான் முதலான நிலையங்களுக்கு பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவைதவிர செய்மதி படிமங்கள் இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. விவசாயத் திணைக்களம். மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்றவற்றிலிருந்தும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பலவேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் புவியிடத் தொழில்நுட்ப முறையின் ஊடாக பகுப்பாவுக்குட்படுத்தப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சாய்வு, தரையுயரம் தரைதோற்றம், ஆறுகளின் ஒழுங்கு, நதிகளின் அடர்த்தி, நிலப்பயன்பாடு, சனத்தொகை அடர்த்தி மழைவீழ்ச்சி போன்ற பரமானங்களின் ஊடாக வெள்ள இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ள இடர் ஏற்பட்ட ஆண்டுகளை கண்டறிவதற்கு படிவுவீழ்ச்சியின் நியமக் குறிகாட்டி (Standardized Precipitation Index-SPI) கணிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக ஆய்வு பிரதேசத்தில் தீவிர வெள்ள இடர், நடுத்தர வெள்ள இடர் மற்றும் வெள்ள இடர் ஏற்படாத ஆண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஒருங்கல் மேற்காவுகைக்கருவம்-11 வடகீழ் மொன்சூன் பருவ மழைவீழ்ச்சி காலங்களில் பெறப்படும் செறிவான மழைவீழ்ச்சி காரணமாகவுள்ளது. இவைதவிர தரைத்தோற்ற அமைப்பு. வடிகாலமைப்பு, நீர் நிலைகள், திட்டமிடப்படாத மனித நடவடிக்கைகள் போன்றன வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களாக விளங்குகின்றன. வெள்ள இடர் நெற்பயிர்ச் செய்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தினை ஆய்வு செய்வதற்கு பியர்சனின் இணைவுக் குணகப் பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் வெள்ள LJ தொடர்பில் ஒருங்கிணைந்த பரமாணங்களை உள்ளடக்கி வெள்ள இடர், வெள்ள ஆபத்துப்பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது. பொன்னகர், பன்னங்கண்டி, மருதநகர், பெரிய பரந்தன், சிவநகர், உருத்திரபுரம் போன்ற பிரதேசங்கள் அதிக வெள்ளம் ஏற்படும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வெள்ள இடரிற்கு உட்படக் கூடியனவாக இருக்கின்றது. குறிப்பாக டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான மாதங்களில் தொடரும் வெள்ளத்தினால் ஏறக்குறைய 50 சதவீதமான நெற் செய்கை பாதிப்பிற்கு உட்படுகின்றன. இதன் காரணமாக வருடாந்தம் 10433 ஏக்கர் நெல்பயிர்ச் செய்கை பாதிக்கப்படுவதுடன், 28228.4 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. 992.9 மில்லியன் வருமான இழப்பும் ஏற்படுகின்றது. இதனால் 13:25 சதவீதமான மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுப் பிரதேசத்தில் ஏழு ஆற்று வடிநிலத்திலுள்ள பிரதான குளங்கள் வாபைாயும் காலத்தில் கூடுதலாக வெள்ளம் ஏற்படுகின்றது. குறிப்பாக மாவட்டத்தில் 15 மீற்றருக்கு குறைவான நிலப்பகுதி தரைத்தோற்றம் பிரதேசம் பெருமளவு பாதிப்புக்களை சந்திக்கின்றது. இதன் காரணமாக அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாழ்நிலப் பகுதிகளை கருத்தில் கொள்ளுதல் அவசியமானதாகும். கனகராயன் ஆற்றின் மேல் மாங்குளத்திற்கு அண்மையில் புதிய நீர்த்தேக்கங்களை அமைதல், அனர்த்த ஆபத்து பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அனர்த்த முன் எச்சரிக்கையினை உரிய காலத்தில் வழங்குதல். மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படத்துதல் மூலம் வெள்ள இடரினை தணிப்புச் செய்ய முடிவதுடன், மீட்சித்திறன் கொண்ட நீடித்து நிலைக்கக்கூடிய சமுதாயத்தினையும், பயிர் முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட அபிவிருத்திக்கும் அடிப்படையாக அமையும் |
en_US |