Abstract:
இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற போதிலும் அபிவிருத்தி நடவடிக்கையானது ஒரு சில இடங்களிலே குவியப்பட்டுள்ளது. மற்றைய இடங்கள் அபிவிருத்தியில் பிள்னடைவிளை கொண்டு காணப்படுகின்றது. அதேபோன மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலும் அபிலிருந்தி நடவடிக்கை ஏற்றத்தாழ்வினை கொண்டே காணப்படுகின்றது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் கிழக்குப்பகுதி பிரதேசம் அபிவிருத்தியில் ஏற்ற இறக்கங்களும் காணப்பட்டதுடம் பிரதேச அபிவிருத்திக்கான வாய்ப்புகள் பூரணமாக பயன்படுத்தப்படவில்லை.எனவே இவ்வ கட்டுரையின் மூலம் இப்பிரதேச சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு தீர்வாலோசனைகள் வழங்குவதாக காணப்படுகின்றது. பிரதேச செயலாளர்கள் பிரிவு கிழக்கு பகுதி மக்களின் சமுக பொருளாதாரத்தின் நிலையில் கண்டறிதல்,ஆய்வு பிரதேசத்தின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் உள்ள சவால்களினை இனங்காளல், சமூக பொருளாதார அபிவிருத்திக்கான சவாலுக்கான தீர்வு ஆலோசனைகளை முன்வைத்தல் போன்ற சிறப்பு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தரவுகள் நேரடி அவதானிப்பு, நேர்காணல்,வினாக்கொத்து ஆகிய முதலாம்நிலை தரவுகள் மூலமும் இரண்டாம் மூலமும் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. விளாக்கொத்தானது ஆய்வுப் பிரதேசத்தின் குடும்பங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக 2.5 சதவீத அடிப்படையில் எழுமாற்றாக வழங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட தரவுகள், தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கலப்பு அணுகுமுறையினூடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. EXCEL மென்பொதியினை பாவித்து தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் ஆய்வுப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வளங்கள் ArcGIS 10.3 மென்பொதியினைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆய்வுப்பிரதேசத்தில் காணப்படும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான சவால்களை அறிந்து, அதனை இழிவளவாக்குவதற்கான பரித்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் SWOT பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் பிரதேச அபிவிருத்தியை எவ்வாறு மேற்கொள்வதற்கான பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் தடை என்பன தொடர்பாக ஆராயப்பட்டு இவ்வாய்வின் மூலம் ஆய்வின் பிரதேசத்தில் சமூக,பொருளாதார ரீதியான அபிவிருத்தியல் உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு. குடியிருப்பு,வறுமை போன்றவற்றில் காணப்படும் சவால்களினை இழிவளவாக்கி பிரதேச அபிவிருத்தி மேன்படுத்துவதுகின்ற போது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு சிறப்பாக காணப்படும் போது அப்பிரதேசம் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.