Abstract:
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள காத்தான்குடி நகரி இட, காலரீதியான நகர வாரச்சியிளைக் கனிடறிவதளை தோக்காகக் கொண்டு இவ் ஆய்வு முன்மெடுக்கப்பட்டுள்ளது. ஆய்லின் பிரதான நோக்கம் காத்தாடி நகரில் இட கால ரீதியான நகர வளர்ச்சியிளை பகுப்பாய்பு செய்தல் ஆகும் நோக்கங்களாக ஆய்வுப் பிரதேசத்தின் கடந்த 2 தசாப்த காலத்தில் இட, கால ரீதியான வளர்ச்சி பாங்கினை மதிப்பீடம் ஆகும் ஆபிரதேச வளர்ச்சிக்கான, விரிவாக்கத்திற்கான சாவால்களை அடையாளப்படுத்தல் மற்றும் ஆய்வுப் பிரதேசத்தில் நகர வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் என்பனவாகும். இவ் ஆய்பிற்காக முதலாம். நினைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளm முதலாம் நிலைத் தரவுகளாக அவதானிப்பு மற்றும் நேர்காணல் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ன. ஆய்விற்காக Google Earth நரவுகள் மற்றும் USGS Earth Explore தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மாநகர சவய மற்றும் நாத்தான்குடி நகர சபை மற்றும் பிரதேசசயை என்பவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகள் ஆய்வில் புகுந்தப்பட்டு அளவு சார் ரீதியிலும், பண்பு சார் ரீதியிலும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோக்க அடிப்படையில் பெறுபேறுகளாக ஆய்வுப் பிரதேசத்தின் சனத்தொகைப் பரம்பல் மற்றும் நிலப் பயன்பாட்டு அம்சங்கள் இரண்டு தசாப்த காலங்களில் ஒப்பீடு செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்து முடிவுகள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட ஆயலின் முடிவின் படி நகரில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் கிட்டத்தட்ட 150:51 ஹெக்டயர் அதிகரிப்பினைக் காட்டி நிற்கின்றது. அதேவேளை தாவரப் போர்வையானது 111.06 ஹெக்டயர் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் சனத்தொகையானது கடந்த 2 தசாப்த காலப்பகுதிகளுள் 46.66% மான அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆய்வுப் பிரதேசம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை காணப்படுகின்றது. எளலே ஆய்வுப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட சவால்களாவன, சனத்தொகை அதிகரிப்பு காரணமாக நகரில் இடப்பற்றாக்குறை சார் பிரச்சினைகள், வாகனங்களின் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல், வாழ்வாதார மேம்பாட்டிற்கான வளப்பற்றாக்குறை, நகரின் நாடா வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள், நகர நிலப்பெறுமதி அதிகரிப்பு, நிலப்போர்வையில் மாற்றம், நகர வறுமையும் வாழ்வாதாரமும், வேலையின்மைப் பிரச்சினைகள், சூழல் ரீதியான பாதிப்புக்கள். நகர வெப்பம் அதிகரிப்பு, நோய்களின் தாக்கம் என்பனவாரும், இல் ஆய்வில் மூலம் இச் சவால்களை இனங்கண்டு அவற்றிற்கான சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே நகரில் நிலைத்திரு அபிவிருத்தியினை மேற்கொண்டு நகரில் அதிகரித்து வரும் மனித வளத்தினை சிறந்த முறையில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.