Abstract:
பயிர்ச்சேர்க்கையிலளக் கண்டறிதலும், படமாக்குதலும் அத்துடன் ஆய்வுப்பிரதேசத்தின் பயிர்ச்செய்கை நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறிதலும், அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தல் என்பனவற்றை உப நோக்கங்களாகவும் கொண்டுள்ளது. இந்நோக்கங்களினை அடைந்துக்கொள்ளும் பொருட்டு முதலாம் நிலைத் தரவுகளாக வினாக்கொத்து முறையானது,எளிய எழுமாற்று நுட்பமுறைக்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளின் மொத்த விவசாய குடும்பங்களிலிருந்து 23 சதவீத அடிப்படையில் மொத்தமாக 80 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் நேர்காணல், கலந்துரையாடல் மற்றும் கள் ஆய்வின் மூலமும் ஆய்வுக்குத் தேவையான முதலாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வுக்கு தேவையான இரண்டாம் நிலைத்தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் புள்ளிவிபரவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்வதற்காக Microsoft Excel மென்பொருளினை பயன்படுத்தி வரைபுகள், அட்டவணைகள் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. ஆய்லின் இட ரீதியான பகுப்பாய்விற்காக Arc GIS 10.7.1. Google Earth, Maps Me ஆகிய மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு தரைத்தோற்றம், பயிர்ச்சேர்க்கை, பயிர்ப்பல்வகைமை மற்றும் பயிர்ச்செறிவு ஆகியவற்றுக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு பயிர்ச்செய்கை பாங்கானது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெல்ஸ் (Waver's) என்பவரின் பகுப்பாய்வு நுட்பத்திற்கு அமைவாக பயிர்ச்சேர்க்கை, பயிர்ப்பல்வகைமை மற்றும் பயிர்ச்செறிவு என்பன கண்டறியப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஹின்னாரங்கொல்ல, மஹதென்ன, குருதலாவ. உடகந்தகொல்ல, கல்லதென்ட, ரஹங்கல, பொரலந்த, ஹெலயல்குபுர, அலுகொல்ல போன்ற பிரதேசங்களில் 5 பயிர்ச்சேர்க்கையும், ரக்கராவ, வங்கேகும்புர, ஒஹியவத்த போன்ற பிரதேசங்களில் 4 பயிர்ச்சேர்க்கையும், கரகஸ்தென்ன பிரதேசத்தில் 6 பயிர்ச்சேர்க்கையும், மாலிகாதென்ன, பிடபொல ஆகிய பிரதேசங்களில் 7 பயிர்ச்சேர்க்கையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பயிர்ப்பல்வகைமையானது ஒஹியவத்த பிரதேசத்தில் குறைவாகவும், ஹெலயல்கும்புர, உடகந்தகொல்ல. ஹின்னாரங்கொல்ல ஆகிய பிரதேசங்களில் நடுத்தர அளவிலும், ஏனைய பதினொறு பிரதேசங்களில் அதிகமாகவும் காணப்படுகின்றமையானது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆய்வுப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான பரிந்துரைகளும் இவ்வாய்வின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.