Abstract:
இவ்வாய்வு வவுனியா நகரசபை பகுதியில் உள்ள ஈரநிலங்களை அடையாளம் கண்டு படமாக்கள் மற்றும் அளலைபடுத்தல், வவுனியா நகரசபை நகராக்கத்தினால் ほけ நிலங்கள் எதிர்நோக்கும் சவால்கனை பகுதியில் கண்டறிதல், எதிர்நோக்கும் சவால்களுக்கான காரணங்களை கண்டறிதல், வவுனியா நகரசபை பகுதியிலுள்ள ஈர நிலங்களை பேணுவதற்கான வினைத்திறனான ஆலோசனைகளை முன் வைத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டது. ஆய்வுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1993 ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 1:50,000 இடவிளக்கவியல் படம் மற்றும் Google Erath Pro மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட 2022காண படம் என்பவற்றை ArcGIS 10.3 துணைகொண்டு எண்ணிலக்கப்படுத்தப்பட்டு மேற்படிதல் பகுப்பாய்வு நுட்பமுறை ஊடாக ஈரநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கண்டறியப்பட்டது. மற்றும் வவுனியா நகரசபை பகுதியிலுள்ள ஈரநிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அளவைப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் மூலமாக வவுனியா நகர சபை பகுதியில் நகரத்தினால் ஈர நிலங்கள் எதிர்நோக்கும் சவால்களாக ஈரநிலம் மாசடைதல், உயிர் பல்வகைமை மற்றும் உயிரினங்களின் வாழ்விடம் அழிவடைதல், ஈர நிலங்களின் அளவு குறைவடைதல், மற்றும் ஆக்கிரமிக்கும் தாவரங்கள் என்பன கண்டறியப்பட்டன. சவால்களுக்கான காரணங்களாக சனத்தொகை அதிகரிப்பு, முறையற்ற கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகள், நிலமீட்சியும் நகராக்க செயற்பாடுகளும், விழிப்புணர்வு குறைவு. உயிர் பல்வகைமைக்கு எதிரான செயற்பாடுகள் என்பன கண்டறியப்பட்டன. ஆய்வின் முடிவுகளாக ஈரநிலம் மாசடைதல் அதிகமாகவுள்ளது. 1993ஆம் ஆண்டு மொத்த நிலப்பரப்பில் 42.2 சதவீதமாக காணப்பட்ட ஈர நிலங்கள் 2022ஆம் ஆண்டு 8.2 சதவீதம் குறைவடைந்து 34 சதவீதமாக காணப்படுகின்றது. ஈரநிலங்களிலுள்ள உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்கள் பாதிப்படைகின்றது. ஆக்கிரமிக்கும் தாவரங்களின் பரவுகை அதிகமாகவுள்ளது. ஈரநிலங்கள் சவால்களை எதிர்கொள்ள சனத்தொகை அதிகரிப்பு பிரதான காரணமாகும். என்பன பெறப்பட்டது. ஈரநிலங்களை பேணுவதற்கான வினைத்திறனான ஆலோசனைகளாக ஈரநிலங்களை பாதுகாப்பதற்கான முறையான நகர அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கல், தாவரப் போர்வைகளை பாதுகாத்தல் மற்றும் புதிய தாவரங்களை உருவாக்கல், விழிப்பு குழுக்களை உருவாக்கி செயல்படுத்தல், முறையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சட்ட நடவடிக்கைகள் எடுத்தல், ஈரநிலங்களை எரியூட்டுவதை தவிர்த்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்பன முன்மொழியப்பட்டன