dc.description.abstract |
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச்செய்கை முறைகளில் நெற்செய்கையும் ஒன்றாகும். அந்த அடிப்படையில் இவ்வாய்வாளது விவசாயப் பொருளாதாரமான நெற்பயிர்ச் செய்கையில் பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளால் தங்கநகர் நெற்பயிர்ச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விபரிப்பதே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. ஆய்வுக்காக முதலாம். இரண்டாம் நிலைத்தரவு சேகரிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் அளவுசார் ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் விளக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக நெற்செய்கை செய்பவர்களில் 25 சதவீதமானோர் தெரிவு செய்யப்பட்டு 80 வினாக்கொத்துக்களின் மூலமாக தரவுகள் பெறப்பட்டுள்ளன. Excel முறையினை பயன்படுத்தி நெற்செய்கை தொடர்பான தரவுகள் அட்டவணைகள், புள்ளிவிபரபடங்கள், வரைபடங்கள் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. Arc GIS பயன்படுத்தி ஆய்வுப் பிரதேசம், சனத்தொகை பரம்பல், நீர்பாசனத் தொட்டிகள், நிலப்பயன்பாடு மற்றும் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்கள் போன்றன படமாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தின் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மண் மாதிரிகள் பெறப்பட்டு மண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசததில் 80 வீதமான விவசாயிகள் BG 360 (கீரிசம்பா), நெல்லின வகையினையே பயிரிடுவதுடன், 99 சதவீதமான விவசாயிகள் அசேதன பசளையினையும், 1 சதவீதமான விவசாயிகள் சேதன பசளையினையும் பயன்படுத்தி நெல்லுற்பத்தியில் ஈடுபடுகின்றமையை அறியமுடிந்தது. ஆய்வு பிரதேசத்தின் மண் மற்றும் நீர் தரம் தொடர்பான ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு பிரதேசத்தினை பொறுத்தவரை நிலம், நீர் மாசு என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆனால் எதிர்காலத்தில் மாசு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. நெற்செய்கை விவசாயிகள் மாற்றமடைந்துள்ள அரச மற்றும் சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளால் நெற்செய்கையை மேற்கொள்ளும் போது அதிகளவான மூலதனச் செலவு ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படக் கூடிய செலவுகளினால் விவசாயிகள் எதிர்கொள்ளக் கூடிய சமூக, பொருளாதார, பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு ஏற்ற வகையில் சாதகமான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது |
en_US |