dc.description.abstract |
தினமக்கழிவகற்றலும் முகாமைத்துவ நடைமுறைகளும் மட்டக்களப்பு மாநார சபை எனும் ஆய்வானது தலைநகர் கொழும்பில் மட்டுமின்றி மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர்ப்புறங்களிலும் திம்மக்கழிவகற்றல் பாரிய பிரச்சினையாக உள்ளது. தினமக்கழிவுகனை முகாமைத்துவம் செய்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்வதுடன் கழிவுகளை கொட்டுவதற்கான இட பற்றாக்குறை என்பவற்றினை ஆய்வுப்பகுதி எதிர்கொள்கிறது. மட்டக்களப்பு வெளியேற்றப்படும் திவர்மக்கழிவுகளை மாநகர பிரதேசத்தில் வகைப்படுத்தலும் அவற்றை அளவைப்படுத்தலும் மற்றும் திாமக்கழிவு முகாமைத்துவத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிதல் சவால்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் என்பன ஆய்வினுடைய முக்கிய நோக்கங்களாக காணப்படுகின்றது. இந்த இலக்குகளை அடைய முதலாம் நிலை தரவுகளான விளாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானிப்பு மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் கச்சேரி மண்முனை வடக்கு பிரதேச செயலகம், வளிமண்டலவியல் திணைக்களம் போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபர தரவுகள், காலநிலைத் தரவுகள், மாநகர สบ அறிக்கைகள் போன்றவற்றிலிருந்து பல விடயங்கள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் 81 மாதிரிகள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி முறையை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும் 81 மாதிரிகளில் இருந்து 49 மாதிரிகள் குடியிருப்பாளர்களுக்கும் 32 மாதிரிகள் ஏனையவற்றுக்கும் வழங்கப்பட்டது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு நாளுக்கான தினசரி கழிவுகளின் நிறை அளவிடப்பட்டன. கழிவுருவாக்க அளவுகள் கழிவுகளின் சராசரியைக் கண்டு கணிக்கப்பட்டது. இதனூடாக மொத்த திண்ம கழிவின் அளவினை அளவிடக்கூடியதாகவிருந்தது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு சார் மற்றும் பண்புசார் முறையினை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது. ARC GIS 10.7.1 மென்பொருளினை பயன்படுத்தி இடஞ் சார்ந்த வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. EXCEL இனை பயன்படுத்தி பார் வரைபடங்கள், கோட்டு வரைபடங்கள், வட்ட வரைப்படங்கள், அட்டவணைகள் போன்றன தயாரிக்கப்பட்டன. அத்துடன் கள ஆய்வின் உண்மைத்தன்மையினை பிரதிபலிக்கும் முகமாக ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன.தெரிவு செய்யப்பட்ட ஏழு கிராம சேவகர் பகுதியில் இருந்து வெளியாகின்ற தினசரி கழிவுகளின் சராசரி அளவு 32809 kg ஆகும். இவற்றில் 95% கழிவுகள் வீடுகளாலும் 5 சதவீதம் வணிக மையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் எஞ்சிய பிறவற்றாலும் உருவாக்கப்படுகின்றன. பரிந்துரைகளாக விழிப்புணர்வினை உருவாக்குதல், நிர்வாக குழு மற்றும் அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள், தொடர்பாக மாநகர சபை ஊழியர்கள் இடையே பயிற்சிகள் மற்றும் உளப்பாங்கினை விருத்தி செய்தல், சட்டத்தின் அமலாக்குதல் போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. |
en_US |