Abstract:
காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் விவசாயம் மற்றும் மனித நடவடிக்கைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாய்வானது கந்தளாயின் மழைவீழ்ச்சியும், நெற் பயிர்ச்செய்கையில் ஏற்ப்படுத்தி வரும் தாக்கம் பற்றி ஆய்வு செய்வதாக அமைகின்றது. இவ்வாய்வின் நோக்கங்களாக கந்தனாயின் மழைவீழ்ச்சியினை அறிதல், மழைவீழ்ச்சியின் நிகழ்தவினை மார்க்கோ சங்கிலி மாதிரியினடிப்படையில் வாராந்த ரீதியில் பகுப்பாய்வு செய்து ஈர.வறண்ட வாரங்களை அடையாளம் செய்தல், அம் மழைவீழ்ச்சி நிகழ்தகவினடிப்படையில் பொருத்தமான பயிர்கால அட்டவணையினை சிபாரிசு செய்தல் மேலும் கந்தளாயின் நெற்பயிர்செய்கை போக்கினை அறிதல், கந்தளாயின் நெற்செய்கையில் மழைவீழ்ச்சி ஏற்ப்படுத்தும் தாக்கத்தை அறிதல் என்பன முக்கிய நோக்கங்களாக உள்ளன. இவ்வாய்வில் இலங்கை வளிமண்டலத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட கந்தளாய் நிலையத்தின நாளாந்த மாதாந்த, வருடாந்த மழைவீழ்ச்சித் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்தும், கந்தளாய் பிரதேச கமநல சேவை நிலைத்தில் இருந்தும் பெறப்பட்ட நெற்செய்கை தொடர்பான தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மழைவீழ்ச்சிப் போக்குகினை பகுப்பாய்வு செய்வதற்கு வாராந்த சராசரி மழைவீழ்ச்சி, அதிகூடிய, குறைந்த மழைவீழ்ச்சி, வாராந்த மழைவீழ்ச்சியின் சராசரி, நியம விலகல், மாறுதன்மை குணகம், வருடாந்த மழைவீழ்ச்சி போக்கு ஆகியன கணிப்பிடப்பட்டுள்ளது. நெற் பயிர்ச் செய்கைக்கும் மழைவீழ்ச்சிக்கும் இடையிலான தொடர்பினை அறிவதற்கு பியர்சனின் இணைவுக் குணகப் பகுப்பாய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுப்பாய்வுகள் EXCEL GIS (புவியியல் தகவல் முறைமை) போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கந்தளாய் நிலையத்தில வருடாந்த மழைவீழ்ச்சிப் போக்கானது 2011 ஆம் ஆண்டிலிருந்து தளம்பல் நிலையில் தன்மை காணப்படுகின்றது. பருவகால மழைவீழ்ச்சிப் போக்கில் முதலாவது இடைமொன்சூன் பருவத்திலும், தென்மேல் மொன்சூன் பருவத்திலும் கந்தளாய் நிலையத்தில் தளம்பல் நிலை போக்கையே காட்டுகின்றது. இரண்டாவது இடைமொன்சூன் பருவத்திலும், வடகீழ் மொன்குன் பருவத்திலும் கந்தளாய் நிலையத்தில் அதிகரித்த போக்கையே காட்டுகின்றது. கந்தளாய் மழைவீழ்ச்சி நிலையத்திற்குரிய வாராந்த மழைவீழ்ச்சி போக்கானது 41வது வாரம் தொடக்கம் 2வது வாரம் வரை அதிகரித்த போக்கையே காட்டுகின்றது. மற்றைய வாரங்களில் தளம்பல் நிலை தன்மை காணப்பட்டுள்ளது. மழைவீழ்ச்சி நிகழ்தகவினடிப்படையில் பெரும்போக மற்றும் சிறுபோக பயிர்கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியால் நெற்பயிற்ச் செய்கை போக்கில் எதிர்நோக்கும் பிரச்சினைகளினையும் இனங்கண்டு வெளிப்படுத்தப்பட்டது. மேலும் மழைவீழ்ச்சி நெற்ச்செய்கையில் தாக்கம் செலுத்துகின்றன என்றவாறு ஆய்வின் முடிவாக பெறப்பட்டுள்ளன