dc.description.abstract |
இலங்கையின் பைன் மரங்கள் மத்திய மலைநாட்டுப் பகுதியில் மண்ணரிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நியர் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட மரங்களாகும். இம்மரங்கள் பல்வேறு நன்மை தீமைகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. அந்தவகையில் "பைன் மரங்களும் அதன் தாக்கங்களும் தெல்தோட்டை பிரதேசத்தினை மையப்படுத்திய ஓர் ஆய்வு " என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வானது பைன் மரங்களால் ஏற்பட்டுள்ள மண் மற்றும் நீருடன் தொடர்புடைய சூழல் சார்ந்த சவால்களையும் அச்சவால்களை தீர்ப்பதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் நேரடி அவதானம், நேர்காணல், ஆய்வுகூட பரிசோதனைகள் ஆகிய முதலாம் நிலை தரவுகளையும் அறிக்கைகள், செய்மதி படங்கள், ஆய்வுகட்டுரைகள், ஆண்டறிக்கைகள் போன்ற இரண்டாம் நிலை தரவுகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தேயிலை,மரக்கறி, பைன் மரங்கள் காணப்படும் பகுதிகளில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்ணின் அமிலகாரதன்மை (potential Hydrogen pH) மண்ணின் மின் கடந்து திறன் (Electrical conductivity EC) பொசுபரஸ் (Phosphate -P), பொட்டாசியம் (potassium - K) ஆகிய பரமானங்கள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் அளவை ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஆய்வுபிரதேசம், மண் மாதிரி பெறப்பட்ட இடங்கள் ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் பயன்பாடு போன்றவை Arc GIS இனைப் பயன்படுத்தி intrerpolution maps படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் பைன் மரங்கள் காணப்படும் பகுதிகளில் மண் அதிகளவில் அமிலதன்மை கொண்டதாக காணப்படுகின்றது என்பதனை அறிய முடிகின்றது. இங்கு மண், நீர் சார்ந்தும் உயிர்பல்வகைமைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. மேலும் இங்கு மண்ணில் படையா& காணப்படும் பைன் இலைகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாமா என்பதனை அறிவதற்கு இலைமாதிரிகளை பெறப்பட்டு நைட்ரஜன் (Nitrogen -N), பொசுபரஸ் (Phosphate -P), பொட்டாசியம் (potassium - K) ஆகியன ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இவ்விலைகளில் நைட்ரஜன் 23.8 %மும். பொசுபரஸ் 3.22 %மும். பொட்டாசியம் 2.14% மும் காணப்படுவதை அறியமுடிந்தது. அதனால் இதனை பசளையாக மாற்றி எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய பரிந்துரைகளும் பைன் மரங்களின் துணையுடன் மேலும் எவ்வாறான உற்பத்திகளை ஏற்படுத்தலாம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பான என்பது பைன் மரங்களை பரிந்துரைகளும் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தில் எவ்வாறான முன்னேற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |