dc.description.abstract |
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமானது தோட்டப்பயிற்செய்கைக்கு பெயர்பெற்ற இடமாக நிகழ்கிறது. வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகபிரிவில் தோட்டப்பயிர்ச்செய்கை எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வானது தோட்டப் பயிரச்செய்கையை அடையாளப்படுத்தலும், விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களை கண்டறிதலும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நேரடி அவதானிப்பு, நேர்கானால், வினாக்கொத்து போன்ற முதனிலைத் தரவுகள் ஊடாகவும் இரண்டாம்நிலைத் தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுப்பகுப்பாய்விளை மேற்கொள்வதற்காக Excel மென்பொதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தரவுகள் அட்டவணைகள், வரைபடங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு ARC GIS மென்பொருளினூடாக ஆய்வுப்பிரதேசம், சனத்தொகை அடர்த்தி, பயிர்ச்செய்கைப் பரம்பல், நீர் மாதிரி தெரிவிற்கான படம். இடைச்செருகல் படம் (Interpolation map) போன்றன படமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆய்வுப்பிரதேசத்தில் 30 நீர் மாதிரிகள் பெறப்பட்டு PH, EC பரிசோதனைகள் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் வொன்தியூனனின் இடஅமைவு மாதிரியும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடாக சேதன, இரசாயா பசனையை பயன்படுத்துவோர் 84 வீதமாக காணப்படுகின்றனர். அத்துடன் அண்மைக்காலமாக 34 வீதமான விவசாயிகளுக்கு எதிர்பார்த்த உற்பத்தி கிடைக்கவில்லை. 2020 களில் 471.21 மெற்றிக்தொன் உற்பத்தி பதிவாகி பாரிய வீழ்ச்சியினை பதிவுசெய்துள்ளது. அத்துடன் பெற்றுக்கொள்கின்ற வருமானமானது 75 வீதமான விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. தம்பாலை -கதிரிப்பாய், இடைக்காடு, பத்தமேனி ஆகிய மூன்று பிரதேசங்களில் நீர் உவரடைதல் பிரச்சினை அதிகமாக காணப்படுகின்றமை ஆய்வுகூட பரிசோதனை மூலம் அறியப்பட்டுள்ளது. இங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பயன்படுத்துவதற்கு பொருத்தமற்றது. வொன்தியூனனின் மாதிரியின் பொருத்தப்பாடு வலயம் மூன்றில் மாத்திரம் பொருந்துவதினையும் ஏனைய வலயங்களில்
பொருத்தமின்மை ஆய்வுப்பிரதேசத்தில் காணப்படுவதினையும் அவதானிக்க முடிகின்றது. எதிர்கொண்டுள்ள சவால்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது |
en_US |