dc.description.abstract |
இயற்கை வளங்களும் மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக நிலவளம் காணப்படுகின்றது. மிகையான குடித்தொகை போக்கின் காரணமாக இன்று நிலத்திற்கான கேள்வி அதிகரித்த வண்ணம் உள்ளது மனித செயற்பாடுகள் அனைத்திற்கும் நிலம் அடிப்படையாக காணப்படுகின்றது. இதற்கமைவாக "பண்டாரவளை செயலகப்பிரிவில் நிலப்பயன்பாட்டு மாற்றமும் அதன் விளைவுகளும் (2000 பிரதேச 2022) எனும் தலைப்பில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளண்டாரவளை பிரதேச செயலகப்பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் 2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பயளிபாட்டு மாற்றங்களை புவியியல் தகவல் முறையினூடாக கண்டறிந்து வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டுள்ளது. இவ்வாய்வு பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியின் நடந்தகால நிலப்பயன்பாட்டைக் கண்டறிதல், பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்கால நிலப்பயன்பாட்டைக் கண்டறிதல், பண்டாரவளை பிரதேச நிலப்பயன்பாட்டிற்கான காரணங்களை கண்டறிதல் மற்றும் அதளால் ஏற்படும் விளைவுகள் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான நோக்கத்தினை அடைய முதலாம் நிலைத்தரவுகள் நேரடி அவதானம், நேர்காணல் மற்றும் குழுக்கலந்துரையாடல் மூலமாக பெறப்பட்டுள்ளதோடு இரண்டாம் நிலைத்தரவுகளான 2000 மற்றும் 2022 கான Google Earth படங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அறிக்கைகள், பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவு மூலவள திரட்டு (2020), ஆய்வுடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நிலப்பயன்பாடு மற்றும் நிலப்பயன்பாடு மாற்றம் என்பனவற்றினை புவியியல் தகவல் முறையில் கையாள Google Earth Pro மூலமான 2000 மற்றும் 2022 ஆண்டுக்கான படங்களினை தெரிவு செய்து Digitize செய்யப்பட்டு ArcMap 10.7.1 பயன்படுத்தி இடரீதியான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Microsoft Excel மென்பொருளை பயன்படுத்தி வரைபுகள், விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நிலப்பயன்பாடு படத்தினை கொண்டு ஆய்வுப்பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்ட நிலப்பகுதிகளும் தரிசு நிலப்பரப்புகளும் முறையே 14.4% மற்றும் 1% அதிகரிப்பினையும் பிறபயிர்செய்கை. தேயிலை நிலப்பரப்புகள், காட்டு நிலப்பகுதிகள் ஆகியன முறையே 12.7% 2.4%, 0.2% நிலப்பயன்பாடுகள் முறையே சதவீதத்தாலும் குறைவடைந்துள்ளமையினையும். இந்நிலப்பயன்பாட்டு மாற்றங்களுக்கான காரணிகளாக காடழிப்பு, அபிவிருத்தி செயற்பாடுகள் முக்கியமாக அமைவதோடு அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளன. அத்தோடு எதிர்கால நிலப்பயன்பாட்டு
திட்டமிடலுக்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |