dc.description.abstract |
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசத்தில் குடிநீரின் தரம் தொடர்பிலான பல்வேறுபட்ட சமூக, பொருளாதார பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ்வாய்வின் பிரதான நோக்கம் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் குடிநீரின் நரம் பற்றிய இடரீதியான பகுப்பாய்வினை மேற்கொள்ளல் ஆகும். உப நோக்கங்களாக ஆய்வுப் பிரதேசத்தில் குடிநீரின் தரம் தொடர்பாள பரமானங்களைப் பரிசீலித்து படமாக்கல், ஆய்வுப் பிரதேசத்தில் குடிநீரின் தரமாறுபாட்டுக்கு பொறுப்பான காரணிகளை இளங்காணுதல், ஆய்வுப் பிரதேசத்தில் குடிநீரின் தரமாறுபாடு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறிதல், குடிநீர் பிரச்சினை சார்ந்து எதிர்நோக்கப்படும் சவால்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் ஆகியன அமையப் பெற்றுள்ளன. ஆய்வில் அளவைசார் மற்றும் பண்புசார் ரீதியாக இரு முறையியல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தேவையான முதலாம்நிலைத் தரவுகள் நேரடி அவதானிப்பு, நேர்காணல், பரிசோதனை ஆகிய முறைகளின் ஊடாகவும், இரண்டாம்நிலைத் தரவு மூலங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசம் முழுக்குடியாக தெரிவுசெய்யப்பட்டு அங்குள்ள கிணறுகளில் 3% எனும் அடிப்படையில் $2 மாதிரிகள் பெறப்பட்டு அவற்றின் pH, EC, TDS, Turbidity. Salinity ஆகிய பரமானங்கள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெறுமானங்கள் பெறப்பட்டன. பரமானம் ஒவ்வொன்றினதும் பெறுமானங்களின் இடரீதியான வேறுபாடுகள் ArcGIS 10.4 மென்பொருள் மூலமாக படமாக்கப்பட்டு தரரீதியான நிலைமைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் காணப்படும் குடிநீர்க்கிணறுகளில் மிக உயர்வாக TDS (1625mg மற்றும் உவராக்கம் (9.9) ஆகியன அதிகரித்துக் காணப்படுகின்றன. pH ஆய்வுப்பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் பருகுவதற்கு உகந்த வரையறைக்குள்ளும், மின்கடத்துதிறன், கலங்கற்தன்மை ஆகியவை ஆய்வுப்பிரதேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் கூடிக்குறைந்து காணப்படுகின்றது. குடிநீர்க் கிணறுகளின் இத்தகைய தரமாறுபாடுகளுக்கு பிரதேசத்தின் அமைவிடமும் தரைத்தோற்றமும், மணி அமைப்பு, இயற்கை அனர்த்தங்கள், போன்ற பௌதிக காரணிகளும் கண்டல்தாவர அழிப்புக்கள், மணல்அகழ்வு செயற்பாடுகள், குடிநீர்க்கிணறுகளின் ஒழுங்கற்ற பராமரிப்புக்கள், ஒழுங்கற்ற வடிகாலமைப்புக்கள், விவசாய நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், கிணறுகளின் பற்றாக்குறை போன்ற மானிடக் காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே தரைக்கீழ்நீரின் தரநிலைமைகளுக்கு ஏற்ப பிரதேசத்தில் ஆய்வுப் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். |
en_US |