dc.description.abstract |
பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் மக்கலின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் காணப்படுகின்றது. இப் பிரதேச செயலகப்பிரிவில் பௌதீக மற்றும் மானிட காரணிகளினால் பல்வேறு விவசாய பிரச்சினைகள் ஏற்படுகின்றன ஆய்வுப் பிரதேசத்தில் அன்மைக்காலமாக மண்ணரிப்பு, நிலவள இழப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதைக் காணலாம். விவசாய நிலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக விளைச்சல் குறைவடைவதோடு வாழ்கைத்தரம் பாதிக்கப்படுகின்றது. இப்பிரச்சினையை மையமாகக் மக்களின் கொண்டு இவ்வாய்வு ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவில் பயிர்ச்செய்கை பரம்பல் பாங்கு, விவசாய நிலங்கள் எதிர்நோக்கும் சவால்களை கண்டறிவதோடு ஆய்வுப் பிரதேசத்தின் விவசாய முறைமைகள், விவசாய நிலங்கள் எதிர்நோக்கும் சவால்களை கண்டறிதல், விவசாய நிலங்களின் பிரச்சினைகளை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்வதாக அமைகின்றது. இவ் ஆய்வானது அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான இரு முறைகளையும் உள்ளடக்கி கலப்பு முறை ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தேவையான தரவுகளான முதலாம் நிலை தரவுகள் நேரடி அவதானிப்பு, நேர்காணால், வினாக்கொத்து, ஆய்வுக் கூடப் பரிசோதனைகள் போன்றனவற்றின் அடிப்படையிலும் இரண்டாம் நிலைத்தரவுகள் மாவட்ட புள்ளிவிபரவியல் அறிக்கை, ஊவா பரணகம பிரதேச செயலக அறிக்கை, விவசாயத் திணைக்கள் தரவுகள். ஆய்வுக் கட்டுரைகள், இணையத்தளங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டன. வினாக்கொத்திற்காக தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகப் பிரிவுகளில் விவசாய குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையில் எளிய எழுமாற்று மாதிரி நுட்பமுறையின் ஊடாக 84 குடும்பங்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட பரிசோதனைக்காக விவசாய நிலப்பரப்பினை அடிப்படையாகக் கொண்டு 20 மண்மாதிரிகள் பெறப்பட்டு மண்ணின் தரம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்காக GIS தொழில்நுட்பத்தின் மூலம் தரையுயர வேறுப்பாட்டு படம், சமவுயரக்கோட்டுப் படம், சாய்வுப் படம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் பெறுபேற்றின்படி ஆய்வுப் பிரதேச பயிர்ச்செய்கை பரமபல் பாங்கானது மொத்த நிலப்பயன்பாட்டில் 61 சதவீதம் காணப்படகின்றது. ஆய்வு பிரதேசத்தில் விவசாய நிலங்களில் மண்ணரிப்பு மற்றும் விவசாய நிலம் நீரில் மூழ்குதல், மரக்கறி பயிர்ச்செய்கை நிலங்களிள் மண் தரமிழப்பு என்பன மிக முக்கியமான பிரச்சினையாக இனம் காணப்பட்டுள்ளது. எனவே ஆய்வு பிரதேசத்தில் சிறப்பான முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் |
en_US |