dc.description.abstract |
மணமுனை பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலமுனை, புதுக்குடியிருப்பு கிரான்குளம் ஆகிய கிராமங்கள் கரையோரத்தினை கொண்டமைந்த கிராமங்களாகும். இங்கு வாழும் கரையோர மக்களின் ஜீவனோபாய தொழிலாக கரையோர மீன்பிடி காணப்படுகின்றது. இங்கு இயற்கையாக அமைந்த தரைத்தோற்றம், காலநிலை, கடல் வளங்கள் என்பன மீன்பிடியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆய்வுப் பிரதேச மீள்ள மக்களின் சமூக பொருளாதார பிரிச்சினைகளைக் கண்டறிதல் என்பதை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ் ஆய்வின் பிரதான நோக்கம் மண்முனைபற்று பிரதேச செயலகப் பிரிவில் கரையோர மீனவ குடும்பங்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகளை இனங்காணலும், அதற்கான தீர்வாலோசனைகளை முன்வைத்தலும் ஆகும். இவ் ஆய்வானது அளவை சார்ந்த ஆய்வாகவும், பண்பு சார்ந்த ஆய்வாகவும் காணப்படுகின்றது. ஆய்வுக்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலைத் தரவு என்றவகையில் நேரடி அவதானிப்பு, வினாக்கொத்து, களப்புலனாய்வு, கலந்துரையாடல் என்ற அடிப்படையிலும், இரண்டாம் நிலை மூலங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆய்வுக்காக பெறப்பட்டு Microsoft Word, Microsoft Excel, ARC GIS என்பவற்றின் ஊடாக பகுப்பாய்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் பெறுபேற்றின் படி மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரையோர மீனவ சமூகத்தின் சமூக பொருளாதார நிலையானது சிறப்பாக காணப்படவில்லை எனவும், இங்கு காணப்படும் கரையோர மீனவக் குடும்பங்களில் 85 வீதமானவர்கள் சமூக, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் எனவும். அத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாக வருமான பற்றாக்குறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை சந்தை வாய்ப்பு குறைவு போன்ற பல்வேறு நிலைமைகள் இனங்காணப்பட்டது. இந் நிலைமைகளுக்கு காரணமாக காலநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டதாகும். |
en_US |