dc.description.abstract |
சனத்தொகை விருத்திக்கேற்ப தேவைகளும் அதிகரித்து வருவதால் அதனை ஈடுசெய்ய உற்பத்திகளும் அதிகரித்தமையால் வெளியிடப்படுகின்ற கழிவுகளின் அளவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நல்லூர் பிரநோ செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகப்பிரிவுகளில் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான ஆய்வானது அவசியமாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலகப்பிரிவில் 40 கிராம சேவகப்பிரிவுகள் காணப்படுகின்றன. அதில் கழிவுகள் அதிகளவில் வெளியேறும் பகுதிகளாக திருநெல்வேலி மேற்கு, நல்லூர் வடக்கு, கோண்டாவில் வட கிழக்கு, திருநெல்வேலி மத்தி வடக்கு வடக்கு, கொக்குவில் கிழக்கு போன்ற பகுதிகள் இளங்காணப்பட்டுள்ளன.
இங்குள்ள மக்கள் அதிகளவில் உற்பத்திப் பொருட்களை நுகர்வதும், வேலைப்பழுவிற்கு மத்தியில் அதிகளவில் கடைத்தொகுதிகளில் உணவுப்பொதிகள் பெற்றுக் கொள்வதாலும் நாளுக்கு நாள் கழிவுகள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மக்களாலும் பிரதேச சபை ஊழியர்களாலும் அதற்கான ஒழுங்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் பிரதேச அட்டவணைக்கேற்ப கழிவுகளை அப்புறப்படுத்தினாலும் ஊழியர்கள் நேர அதற்கான தீர்வானது பெருமளவில் கிடைக்கப்பெறவில்லை. வெளியேற்றப்படும் திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடங்கள் வரைபடத்தில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்பட்டு வெளியேறும் திண்மக்கழிவுகளின் அளவுகள், வெளியகற்றப்படும் முறைகள், கழிவகற்றலால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இதற்காக நல்லூர் பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 05 கிராம சேவகப்பிரிவுகளில் உள்ள 4028 குடும்பங்களுக்கு 60 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் திரட்டப்பட்டன.
ஆய்வின் மாதிரியாக மக்களே தெரிவு முதனிலைத்தரவுகளான நேரடிக்கலந்துரையாடல், செய்யப்பட்டுள்ளனர். ஆய்வானது வினாக்கொத்துக்கள், நேரடி அவதானிப்பு போன்றன மூலமும் இரண்டாம் நிலைத்தரவான புள்ளிவிபரக்கைந்நூல் ஆய்வுக்கட்டுரைகள் என்பன பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனோடு Arc GIS 10.7 மென்பொருள் உதவியுடன் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் பெறுபேறுகளின் படி மிக அதிகளவில் வெளியேறும் திண்மக்கழிவுகளாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் என்பன இனங்காணப்பட்டுள்ளன. இதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளாக மீள்சுழற்சி செயற்பாடுகள், மாற்றுவழி செயன்முறைகள் போன்றன மேற்கொள்வது சிறந்ததாகும் முன்வைக்கப்பட்டுள்ளன. 61651 ஆய்வின் முடிவில் பரிந்துரைகளாக |
en_US |