dc.description.abstract |
ஆசிரியர்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கிலேயே 2019 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை 10LL ஆசிரியர் வாண்மை அபிலிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகள் கல்லியமைச்சினால் வழங்கப்பட்டன. மாணவர்கள் கற்றல் கற்பித்தல் தொடர்பான நிலைமையின் விருத்தியினைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட மேற்படி செயற்றிதிட்டமானது, பாடசாலைகளில் சீரான வகையில் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தெளிவின்மை இருப்பதனை அவதானிக்க முடிகின்றது மேற்படி விடயத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வானது கல்குடா கல்வி வலயத்தின் ஏறாவூர்ப் பற்று II கோட்டத்தில் உள்ள 23 பாடசாலைகளில் வசதி மாதிரி அடிப்படையில் களிஷ்ட இடைநிலை வகுப்புகளை கொண்டுள்ள 06 பாடசாலைகளும் அவற்றின் அதிபர்களும் மேற்படி கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் கற்பித்தலில் ஈடுபடும் 289 ஆசிரியர்களும் ஆர் பெண் என படையாக்கம் செய்யப்பட்டு முறையே 22, 76 என இலகு எழுமாற்று முறையில் மொத்தமாக 96 ஆசிரியர்களும் கற்கும் தரங்களின் (6,7,8,9) அடிப்படையில் படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரி எடுப்பு அடிப்படையில் 168 மாணவர்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து நேர்காணல் முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட இவ்வாய்வுக்கான தரவுகள் யாவும் நோக்கத்தின் பிரகாரம் அளவு, பண்பு ஆகியன இணைந்த வகையில் MS Excel முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளன. பகுப்பாய்வின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் பெறப்பட்டுள்ளன வகுப்பறைச் செயற்பாடுகளின் போது மாணவர்கள் கற்றலில் கொண்டுள்ள ஆர்வம், மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை இனங்காடு. ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவது, ஆசிரிய மாணவ தொடர்பு ஆகியன குறைவான மட்டத்திலே காணப்படுகின்றது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ச ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கள் குறைவாகவே உள்ளது. மேலும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்றிட்டம் தொடர்பில் குறைவான விளக்கத்தினையே பெற்றுள்ளனர். பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் SBPTD செயற்பாடுகள் ஆசிரியர்களின் தேவைகளை கண்டறிந்து மேற்கொள்ளப்படுவது குறைவாகவே உள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில் SBPTD நிகழ்ச்சித்திட்டங்கள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. (SBPTD) பயிற்சிகளின் பின்னர் மேற்கொள்ளப்படும் வலயக் கல்வி அலுவலக மேற்பார்வை குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இம் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறனான கற்றலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான SBPTD செயற்பாடுகளை . நடத்துவது தொடர்பிலான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. |
en_US |