dc.description.abstract |
ஒரு பாடசாலையின் இலக்கு, நோக்கம் அடையப்படுவது அப்பாடசாலையின் வினைத்திறனான செயற்பாடுகளால் மட்டுமே ஆகும். கற்றல் கற்பித்தல் வினைத்திறன் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு பௌதீக வளங்கள் இன்றியமையாததாகும். க.பொ.த சாதரண தர மாணவர்களின் கற்றல் கற்பித்தல் வினைத்திறன் செயற்பாடுகளில் பெளதீக வளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எனும் தொனிப்பொருளைக் கொண்டு இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. க.பொ.த சாதரண தர மாணவர்களின் கற்றல் கற்பித்தல் வினைத்திறன் செயற்பாட்டினை மேம்படுத்துவதில் பௌதீக வளங்கள் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் பௌதீக வளப்பற்றாக்குறைக்கான காரணங்கள் இனங்கண்டு அவற்றை சரி செய்வதற்கான ஆலோசனைகளை முன் வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இதன்படி இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக உடபளாகு கல்வி கோட்டத்தில் உள்ளப் பாடசாலைகளை வாதி மாதிரி எடுப்பின் மூலம் எட்டு பாடசாலைகளை தெரிவு செய்யப்பட்டுள்ளதன் .நோக்க மாதிரியின் அடிப்படையில் 8 அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 82 ஆசிரியர்கள் ஆண்,பெண் என படையாக்கம் செய்யப்பட்டு இலகு நுட்ப எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் 2:1 என்ற விகிதத்தில் 47 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டரை 383 மாணவர்கள் ஆனர், பெண் என படையாக்கம் செய்யப்பட்டு இலகு நுட்ப எழுமாற்று மாதிரி முறையின் மூலம் 5:1 என்ற விகிதத்தில் 72 மாணவர்கள் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டனர். பாடசாலையில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வினாக்கொத்துக்கள் மூலமும் அதிபரிடம் இருந்து நேர்காணலின் மூலம் தரவு சேகரிக்கப்பட்டு எண்சார் தரவுகளாக மாற்றப்பட்டு சலாகை வரைபு மூலமாக புள்ளிவிபரமாக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.பண்பு ரீதியானதரவுகள் மூலம் மனப்பாங்கு சார்பான விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதற்கான MICROSOFT EXCEL 2013 எனும் முறை பயன்படுத்தப்பட்டு இலக்கிய மீளாய்வுடன் வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக பின்வருளவற்றைக் குறிப்பிட முடியும் நேரமுகாமைத்துவத்தை பின்பற்ற முடியாமை,மாணவர்களின் மேலதிக விளையாட்டு திறமையை அதிகரிக்க முடியாமை, தளப்பாட பற்றாக்குறையால் மாணவர்கள் கற்றலில் விரக்தி தன்மை, செயற்பட்டறைகள் இன்மையால் செய்முறை பயிற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியாமை,நூலக வாதி இன்மையால் மாணவர்களின் மேலதிக கற்றலுக்கு தடையாக இருத்தல் போன்ற முடிவுகள் பெறப்பட்டு அவற்றுக்குரிய விதப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.கற்றல் கற்பித்தல் வினைத்திறன் மேம்பாட்டைய பெளதீக வளங்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். |
en_US |