Abstract:
இலங்கையின் கல்வி திட்டத்தில் பல நன்மைகள் காணப்பட்டிருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளையும் கொண்டமைந்து விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இதனடிப்படையில் இவ்வாய்வானது ஆய்வு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் சிரேஷ்ட இடைநிலை வகுப்பில் கல்வி கற்கின்ற மாணவர்களின் இடைவிலகலால் அப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தல் மற்றும் விதப்புரைகளை முன்மொழிவதாகும். உடுவில் கோட்டத்தில் 32 பாடசாலைகளும், அதில் 747 ஆசிரியர்கள் கல்வி கற்பித்துக் கொண்டு வருகிறார்கள். ஆந்த 32 பாடசாலைகளில் 32378 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர். இங்கு 32 பாடசாலைகளிலிருந்து சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்கள் வரை காணப்படுகின்ற 09 பாடசாலைகளை நோக்கமாதிரி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 09 பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களின் வகுப்பாசிரியர்கள் 30 பேரையும் நோக்கமாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 09 பாடசாலைகளிலும் 3 வருடத்தில் இடைவிலகிய 50 மாணவர்களையும் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம் மாணவர்களின் பெற்றோர்கள் 50 பேரையும் நோக்கமாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளர். அதே போல் 09 பாடசாலையின் அதிபர்களையும் நோக்கமாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்வானது தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் Excel இனூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணை, வரைபுகள் மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளன. ஆய்வானது அளவு ரீதியானதும், பண்பு ரீதியானதுமான விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு ஆய்விற்குத் தேவையான வகையில் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் விதமானது வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் மூலம் பெறப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கான தகவல்கள் இலக்கியமீளாய்வின் மூலம் கிடைக்கப்பட்டுள்ளதுடன் ஆய்வின் முடிவுகளாக சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர். ஆசிரியர்கள் அக்கறையற்றவர்களாகவும், இடைவிலகலை குறைப்பதற்கு போதியளவு நடவடிக்கைகள் பாடசாலைகளில் மேற்க்கொள்ளப்படாமையும், கல்விக் கொள்கைகள் கோட்பாடுகளுக்கமைவாக பாடசாலை செயற்திட்டங்கள் இடம்பெறாமை (13 வருட கட்டாய கல்வித்திட்டம் இன்றும் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தாமை), குடும்ப பொருளாதார நிலை கீழ்மட்டத்திலும், பாடசாலையினுடைய அடைவுமட்டத்தில் பாதிப்பேற்படல், இடைவிலகுபவர்கள் விழுமியமற்றவர்களாக உருவாகல் முதலிய முடிவுகளைக் கொண்டு இவ் ஆய்வு அமையப்பெற்றுள்ளது.