dc.description.abstract |
சமூகத்திற்கு பொருத்தமான திறமை கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன் அடிப்படையில் "பெண் தலைமைத்துவக் குடும்பத்தில் உள்ள ஆரம்பப்பிரிவு மாணவர்கள் கற்றலில் எதிர் நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வின் முக்கிய நோக்கம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள ஆரம்பப்பிரிவு மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை இளங்கண்டு அதனை தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து அதற்கான சிபாரிசுகளை முன்மொழிதல் ஈச்சிலம்பற்றுக் கோட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளில் நோக்க மாதிரியின் மூலம் 16 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் 1C பாடசாலை இரண்டும், வகைII பாடசாலை மூன்றும், வகைIII பாடசாலை பதினொன்றும் உள்ளடங்குகின்றன. நோக்கமாதிரியின் அடிப்படையில் 16. அதிபர்களும், 67 ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களும், 154 பெர்தலைமைத்துவ குடும்ப ஆரம்ப்பிரிவு மாணவர்களும் மற்றும் அம் மாணவர்களின் தாய்மார்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் நேர்காணல், வினாக்கொத்து போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தரவுகள் தகவல்கள் பெறப்பட்டு அவை பண்புரீதியாகவும் மற்றும் அளவுரீதியாகவும் Microsoft Excel படி முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுப்பகுப்பாய்வு மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளாக தாய்மார்களின் அரவணைப்பு இன்மை, குடும்ப வறுமை, தாய்மார்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமை, தாய்மார்கள் வேலைக்கு செல்லுதல், பிள்ளைகளின் கல்வியின் மீது தாய்மார்கள் அக்கறை கொள்ளாமை, கற்றல் உபகரணங்கள் வழங்காமை, சரியான பாதுகாப்பு வழங்காமை, தண்டனை, தாய்மார்கள் பாடசாலையுடன் தொடர்பு இன்மை, தாய்மார்களுக்கு நிரந்தர தொழில் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டன. அதன்படி பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்கள் கற்றலில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் விதப்புரைகளும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |