Abstract:
தரம் 11 மாணவர்களின் விஞ்ஞானப் பாட அடைவு மட்டத்தை மேம்படுத்துவதில் தொழினுட்ப வளங்களின் செல்வாக்கு" எனும் தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலைகளில் விஞ்ஞானப்பாட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் தொழினுட்ப வளங்களின் பிரயோகம் குறைவாக காணப்படுகின்றமையானது மாணவர்களின் அடைவுமட்டத்தை உயர்த்துவதில் பாரிய சவாலாக உள்ளது இந்நிலையில் தொழினுட்ப வளங்களின் பயன்பாட்டினை அதிகரிப்பதும் மாணவர்களின் அடைவுமட்டத்தினை மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளையும், ஆலோசனைகளையும் முன்மொழிதல் ஆய்வுப்பிரச்சினைக்கான பொதுநோக்கம் ஆகும். நுவரெலியா வலயத்தின் கோட்டம் || 42 பாடசாலைகளுள் வசதி மாதிரி அடிப்படையில் துாரம், போக்குவரத்து என்பவற்றைக் கருதி 1AB 3:1,1C 7:3 TYPEII 11:3 என 07 மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளின் அதிபர்களும், 2விஞ்ஞானப்பாட ஆசிரியர்களும் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 84 மாணவர்கள் படையாக்கப்பட்ட இலகு எழுமாற்று அடிப்படையில் பால்நிலை வேறுபாட்டிற்கமைய 71 எனும் விகிதத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் வினாகொத்து, நேர்காணல் ஆய்வுகருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக பெறப்பட்ட தரவுகள் பண்பு ரீதியான மற்றும் அளவு ரீதியான பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும் கலந்துரையாடலும் பயன்படுத்தப்பட்டது. Microsoft Office, Excel மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், உருக்கள் என்பவற்றின் அடிப்படையில் முடிவுகள் பெறப்பட்டன. இவ் ஆய்வு முடிவின்படி விஞ்ஞானப்பாடத்தில் நவீன தொழினுட்ப சாதனங்களையும், ஆய்வுகூட பரிசோதனைகளையும் பயன்படுத்தி கற்றலில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஆனால் நவீன் தொழினுட்ப வளங்கள் பற்றாக்குறையால் அதனை வினைத்திறனாக ஆசிரியர்கள் கற்பித்தலில் பயன்படுத்தாத நிலை காணப்படுகின்றது. விஞ்ஞானப்பாடத்தில் நவீன தொழினுட்ப வளங்களினைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் ஈடுபடும்போது மாணவர்களின் வரவு மற்றும் அவர்களின் விஞ்ஞானப்பாட அடைவு மட்டம் என்பன அதிகரிக்கப்படும் என்ற வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.