dc.description.abstract |
தொழினுட்ப சாதனங்களின் பற்றாக்குறை நவீள கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது தற்காலச் சூழலில் நிலவும் முக்கிய பிரச்சினையொன்றுக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழினுட்ப சாதனங்களின் பற்றாக்குறை தற்கால தொழினுட்ப உலகிற்கு பொருத்தமான மாணவர்களை உருவாக்குவதிலும் நவீன சுற்றல் கற்பித்தல் முறைகளை கையாள்வதிலும் பல பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றன. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் கண்டறிதல் இவ்வாய்வின் நோக்கமாகும். அந்தவகையில் ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றிலுள்ள 35 பாடசாலைகளில் நோக்க மாதிரி அடிப்படையில் 06 பாடசாலைகளும் 6 அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். கனிஷ்ட இடைநிலை பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படையாக்கம் செய்யப்பட்டு பின்பு இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 31 என்ற விகித அடிப்படையில் 93 ஆசிரியர்களில் 33 ஆசிரியர்களும், 10:1 என்ற விகித அடிப்படையில் 2211 மாணவர்களில் 219 மாணவர்களும் மாதிரியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது பாடசாலை அதிபருக்கு நேர்காணலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கி தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பெறப்பட்டு பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுவதுடன் பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் தொழினுட்ப சாதனங்களின் பற்றாக்குறை நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டின் ஆர்வத்தை குறைத்தல், தேடிக்கற்றலுக்கான வாய்ப்பை குறைத்தல், ஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள முடியாமை,வீடியோ, ஆடியோ வகைகளை பயன்படுத்தி கற்பிக்க முடியாமை, நேர முகாமைத்துவத்தை பேணமுடியாமை என பல்வேறு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பாடசாலையில் கிடைக்கப்பெறும் குறைந்தளவிலான தொழினுட்ப சாதனங்களை பயன்படுத்தியும், மேலதிகமான முயற்சிகளில் தொழினுட்ப சாதனங்களை பெற்று நவீன கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |