dc.description.abstract |
மாணவர்களின் பொழுதுபோக்கு செயற்பாடுகளை வினைத்திறனாக மாற்றியமைப்பதில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்கு மிக அவசியமானதாகும். மாணவர்கள் இணையவழி விளையாட்டுக்களை விளையாடுவதனால் LISO பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை அறியும் பொருட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்து, இணையவழி விளையாட்டுக்களின் அதீத வளர்ச்சியானது க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கற்றல் செயற்பாடு, நடத்தைகளில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை அறிந்து அதிலிருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தல் என்ற பொதுநோக்கத்தினை அடிப்படையாக கொண்ட இந்த ஆய்வு பிரதான நான்கு சிறப்புநோக்கங்களை கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக கோறளைப்பற்று வடக்கு கோட்டம் ஆய்வாளரினால் தெரிவு செய்யப்பட்டது. இவ் கோட்டத்தில் உள்ள 20 பாடசாலைகளில் இருந்து நோக்க மாதிரியின் அடிப்படையில் 09 பாடசாலைகளும் அவற்றின் 09 அதிபர்களும், க.பொ.த சாதாணர தரத்திற்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 75 ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்கள் பால்நிலை வேறுபாட்டிற்கேற்ப படையாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் 3:1 எனும் விகிதத்தில் 101 மாணவர்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். எளிய எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 6:1 எனும் விகிதத்தில் 52 பெற்றோர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்த ஆய்வில் வினாக்கொத்து, நேர்காணல் ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு அவை அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான தரவுகள் வரைபுகள், அட்டவணைகள் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுகளின் பகுப்பாய்விற்காக Microsoft Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இவ் ஆய்வு முடிவுகளின் பிரகாரம், இணையவழி விளையாட்டுகளில் அதிகமாக மாணவர்கள் ஈடுபடுவதனால் கற்றலில் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலை அதிகமாக உள்ளது. இவை மாணவர்களின் உடல், உள, கற்றல் சார் மற்றும் குடும்பம் சார் பாதிப்புக்களையும் தோற்றுவித்துள்ளது. இதனடிப்படையில் இணையவழி விளையாட்டிற்காக பயன்படுத்தும் நேரத்தினை பயன் மிக்க முறையில் கற்றல் கற்பித்தல், இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |