dc.description.abstract |
ஆசிரியர் வளப் பற்றாக்குறை சிரேஷ்ட இடைநிலை (10.11) மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம் எனும் தலைப்பில் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரேஷ்ட இடைநிலை (10,11) பிரிவு மாணவர்களின் வினைத்திறனான சுற்றல் செயற்பாட்டிம் ஆசிரியர் வளப்பற்றாக்குறைகளை இனங்காணபதடாக சிரேஷ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களின் கத்தவில் ஏற்படுத்தும் தாக்கத்தினை கண்டறிவதனை நோக்காக கொண்டு இவ் ஆய்வானது மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் உள்ளடங்கும் 24 பாடசாலைகளில் 7 பாட்சாலைகள் வசதி மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து 07 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சிரேஷ்ட இடைநிலைப்பிரிவிற்கு கல்வி கற்பிக்கும் 74 ஆசிரியர்களும், மற்றும் ஆய்வுக்குட்பட்ட பாடசாலையில் இருந்து, தரம் 10,11 மாணவர்களில் படையாக்கப்பட்ட மாதிரித் தெரிலை பயன்படுத்தி ஆண் பெண் என வகைப்படுத்தி 103 மாணவர்கள் 6:1 எனும் விகிதத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் படிவம். ஆவணங்கள் போன்ற ஆய்வுக் கருவிகளின் ஊடாக பெறப்பட்ட அளவு, பண்பு ரீதியான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு எண்சார் தகவல்களாக மாற்றப்பட்டு அட்டவணையாக்கம், சலாகை வரைபுகள், வட்ட வரைபுகள் првоготов புள்ளிவிபரமாக்கப்பட்டு விளக்கப்படுகின்றது. இதற்காக microsoft excel எனும் முறை பயன்படுத்தப்பட்டு இலக்கிய மீளாய்வில் பெறப்பட்ட விடயங்களுடன் வியாக்கியானமும். கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும் பாடசாலையில் பிரதான பாடங்களுக்கும் தொகுதி பாடங்களுக்கும் ஆசிரியர் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது. எனவும் இணைப்பாடவிதமான செயற்பாடுகள் முழுமையாக இடம்பெறுவதில்லை, பாடசாலையின் அடைவு மட்டம் குறைவாக காணப்படுகிறது. உரிய துறை சார்ந்த ஆசிரியர்கள் பாடங்களை கற்பிப்பதில்லை இதனால் தெளிவாக விளங்கி பூரண விளக்கத்தை பெற்று கொள்ளமுடியாமல் மாணவர்களின் அறிவு விருத்தி குறைவடைகிறது. ஆசிரியர் பற்றாக்குறையினால் பற்றாக்குறையினை மாணவர்களின் ஆளுமை நிவர்த்தி செய்வதற்கு பாதிக்கப்படுகிறது. ஆசிரியர் போதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனும் முடிவுகள் பெறப்பட்டு அவற்றுக்குரிய விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்வளம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் வளங்களை பெற்றுக்கொள்ள அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் பயிற்சி தேவையை TNA பகுப்பாய்வின் மூலம் அறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என விதப்புரைகளும் விதந்துரைக்கப்படுகின்றன. |
en_US |