Abstract:
"பாடசாலைகளில் தொகுதிப் பாடத்திற்கான ஆசிரியர் இன்மை சிரேஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களது ஆளுமை விருத்தியில் ஏற்படுத்தும் தாக்கம்" எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வானது தொகுதிப்பாடங்களுக்கான ஆசிரியர் இன்மையினால் தரம் 10,11 மாணவர்களது ஆளுமை விருத்தியில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை கண்டறிவதனை நோக்காகக் கொண்டு இவ் ஆய்வானது அமையப்பெறுகின்றது. இவ் ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்ட பாடசாலைகளில் உள்ள தரம் 10,11 மாணவர்களை உள்ளடக்கிய ஓர் அளவை நிலை ஆய்வு ஆகும். போரதீவுப்பற்றுக் கோட்டமானது 33 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இதில் 07 பாடசாலைகள் தூரம், போக்குவரத்துப் பிரச்சினை என்பவற்றை கருத்திற்க் கொண்டு வசதி மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து 07 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப் பாடசாலைகளில் தரம் 10, 11 இற்கு கற்பிக்கும் 103 ஆசிரியர்களில் இருந்து ஆண். பெண் ভালে படையாக்கம் செய்யப்பட்டு எளிய இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 3:1 என்ற விகிதத்தில் 31 ஆசிரியர்களும், ஆய்வுக்குட்பட்ட பாடசாலையில் தரம் 10,11 இல் கல்வி கற்கும் 429 மாணவர்களில் இருந்து ஆண், பெண் என படையாக்கம் செய்யப்பட்டு எளிய இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 3:1 என்ற விகிதத்தில் 135 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடம் வினாக்கொத்து, நேர்காணல் எனும் ஆய்வுக் கருவிகளின் மூலம் தரவுகள் பெறப்பட்டு பண்புரீதியாகளும், அளவு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Microsoft excel மென்பொருளின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைவுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும் தொகுதிப்பாட ஆளணி வளப்பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது, பாடத்தெரிவில் மாணவரது விருப்பத்தெரிவிற்கு சந்தர்ப்பம் இல்லை, மாணவர்களது பரீட்சை அடைவுமட்டம் குறையும் நிலை காணப்படுகின்றது. உரிய துறைசாரா ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது செய்முறை பயிற்சிகளை மேற்கொள்வதில்லை, ஆசிரியர் பற்றாக்குறையினால் கலை நிகழ்வுகள், போட்டிகளில் பங்கு பற்ற முடியாத நிலை மாணவர்களுக்கு காணப்படுதல் போன்ற முடிவுகள் பெறப்பட்டு அவற்றுக்குரிய விதப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. மாணவரது ஆளுமையை சிறந்த முறையில் விருத்தி செய்ய வேண்டும் எனில் பாடசாலைக்கு தேவையான தொகுதிப்பாட ஆசிரியர்வளம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.