dc.description.abstract |
"க.பொ.த சாதாரண தர மாணவர்கள் ஆங்கிலப் பாட அடைவை அடைவதில் எதிர்கொள்ளும் சவால்கள்" என்னும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வானது கலகுடா கல்வி வலயத்திலுள்ள சு.பொத மாணவர்கள் ஆங்கிலப்பாட அடைவை அடைவதில் எவ்வாறான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதனை இணங்கண்டு, அதற்கான காரணங்களை அறிவதுடன், அதற்கான தீர்வுகளை முன்மொழிதலை நோக்கமாகக் கொண்டு இடம் பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக கல்குடா கல்லி வலயமானது ஆய்வாளரினால் தெரிவு செய்யப்பட்டது. இவ் வவத்தில் உள்ள 84. பாடசாலைகளுள் இவற்றில் இருந்து நோக்க மாதிரியின் அடிப்படையில் 07 பாடசாலைகளும், அப்பாடசாலைகளின் 07 அதிபர்களும், க.பொ.த சாதாரண தரத்திற்கு ஆங்கிலம் கற்பிக்கின்ற 13 ஆசிரியர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். பொ.த உயர்தர வகுப்பு மாணவர்கள் பால்நிலை வேறுபாட்டிற்கேற்பு படையாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் 8:1 எனும் விகிதத்தில் 67 மாணவர்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். எளிய எழுமாற்று மாதிரியின் மூலம் 6.1 எனும் அடிப்படையில் 12 மாணவர்களின் பெற்றோர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்வில் வினாக்கொத்து, நேர்காணல் ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு அவை பண்பு ரீதியான மற்றும் அளவு ரீதியான பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுகளின் பகுப்பாய்விற்காக Microsoft Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இவ் ஆய்வு முடிவுகளின் பிரகாரம் க.பொ.த சாதாரண மாணவர்களின் ஆங்கிலப்பாட அடைவில் தாக்கம் செலுத்தும் காரணிகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அடிப்படை ஆங்கில அறிவு குறைவாக உள்ளமை, பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமை. மாணவர்கள் மேலதிக ஆங்கில வகுப்பிறகு செல்லாமை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதியளவு வளங்கள் இல்லாமை, ஆங்கிலப்பாடத்தில் மாணவர்கள் விடுகின்ற பிழைகளுக்கு ஏற்ப உரிய பின்னூட்டல் வழங்காமை, கற்பித்தலின் போது நவீன உபகரணங்கள் பயன்படுத்தாமை. க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு முந்தைய வகுப்புக்களில் ஆங்கிலத்தில் மாணவர்கள் குறைவான தேர்ச்சிநிலையில் காணப்படல் போன்ற பிரச்சனைகளும், காரணிகளும் ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டதுடன் அது தொடர்பான வழிகாட்டல் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |