dc.description.abstract |
என்னுடைய ஆய்வு கட்டுரையானது அமரர் நாகமணி தம்பிராசா அவர்களின் வாழ்வும் பணியும் ஓர் வரலாற்று பார்வை எனும் தலைப்பில் அமைந்துள்ளது. தம்பிராசா அவர்கள் அரசியல் சமூக சமய கலாச்சாரம், கல்வி, தொல்லியல், வரலாறு என பல துறைகளிலும் பங்களிப்பு வழங்கியுள்ளார், குறிப்பாக தொல்லியல் வரலாறு ஆகிய துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளார். வரலாற்றில் தெளிவுபடுத்தப்படாத விடயங்கள் அழிந்து கொண்டிருக்கின்ற எமது பாரம்பரியங்கள் புதிய வரலாற்று தகவல்கள் முதலியவற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இதுவே இவரது ஆய்வுகளின் முக்கியத்துவம் அவ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ள புதிய தகவல்கள் அவரது கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் எந்த அளவிற்கு பயனுடைய அமையும் என்பது பற்றி அறிவது அவசியமாகும். சாதாரண கல்வி அறிவு கொண்ட ஒருவரான தம்பிராசர கிழக்கிலங்கையின் வரலாற்றுக்கு பங்களிப்புச் செய்துள்ளார். இவரது பங்களிப்பின்றி சில முக்கிய வரலாற்று தகவல்களை நம்பகரமான தொல்லியல் சான்றுகள் மூலம் அறிந்திருக்க முடியாது. இவரது தனிப்பட்ட ஆளுமையின் ஊடாக ாள் மக்கள் மத்தியில் வரலாற்றுச் சான்றுகளையும் வரலாற்றுணர்வையும் கட்டமைத்த விதத்தை அறிந்து கொள்ளுதல் ஆய்வு பிரச்சினையாகும். இதுவே இவ்வாய்வின் ஆய்வுச் சுருக்கமாகும். |
en_US |