dc.description.abstract |
திருகோணமலைப் பிராந்தியத்தின் மத்திய கால வரலாற்றை அறிந்து கொள்வதில் கோணேசர் கல்வெட்டு தனித்துவம் பெறுகின்றது. இப்பிராந்தியத்தின் கலாசாரம், பண்பாடு, வரலாறு, மரபுகள் கோணேசர் ஆலயத்தை அடியொற்றியே தோற்றம் பெற்றது. கோணேசர் கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு இப்பிராந்திய வரலாற்றின பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்துவதே ஆய்வின் பிரதான நோக்கமாகும். இலக்கியச் சான்றான கோணேசர் கல்வெட்டானது ஐதீகங்களுடன் வரலாற்றுத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. இந்நூலில் சொல்லப்படுகின்ற செய்திகள் உண்மைத் தன்மை வாய்ந்தனவா? என்பதனை ஆய்வு விளாவாகக் கொண்டு கிடைக்கின்ற தொல்லியற் சான்றுகளோடு ஒப்பிட்டு வரலாற்று அணுகுமுறையினூடாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக கோணேசர் கல்வெட்டையும், கிடைக்கப்பட்ட சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு குளக்கோட்டனால் கோணேஸ்வர ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டது. முதல் தொழும்பாளர் குடிகளின் வருகை, நியமனம், குடியேற்றம் வரை கூறப்பட்டுள்ளது. இவ்வாய்வினூடாக திருகோணமலைப் பிராந்தியத்தின் பண்பாட்டு அம்சங்கள் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கோணேசர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குளக்கோட்ட மன்னன ஆலயத்திற்குச் செய்த திருப்பணிகள், தொழும்பாளர்களான வன்னிபம், இருபாகை முதனமை, தானத்தார்.வரிபத்தார். கருகுலக்கணக்கன், ஆசாரி, புலவன் போன்ற குடிகளின் வருகை. அவர்களின் குடியேற்றம், வன்னியர்களின் அரசாட்சி, நீதி முறை, தொழும்பாளர்களுக்கான கடமைகள், நான்கு பற்றுக்களின் மக்களுக்கான தொழும்புகள், ஆலய பூசை விதிமுறை. வழங்கப்பட்ட தானங்கள், தொழும்பாளர் குடிகளுக்கான சமூகக் கட்டுப்பாடுகள், தொழும்பாளர்களின் தற்போதைய நிலை, தொழும்புகளில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள், மாற்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள் என்பவற்றினூடாக திருகோணமலைப் பிராந்தியத்தின் மத்தியகால பண்பாட்டு அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன. மேலும் கோணேசர் கல்வெட்டு காட்டும் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான மேலதிக தேடலுக்கும் இவ்வாய்வு மிக்க பயனுள்ளதாக அமையும். |
en_US |