Abstract:
இன்று மலையக சமுதாயத்தை பிரதிநிதிதுவப்படுத்தி பல கட்சிகள் காணப்படுகின்றன. ஆனால் ஆய்வு சுருக்கம் கருதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பங்களிப்பு என்ற தலைப்பின் கீழ் வரலாற்றாய்வு அணுமுறையின் ஊடாக ஆய்வு செய்யப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 84 வருட வரலாற்று பின்னணியை கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும். தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிறந்த தலைமைத்துவம் காரணமாகவே அக்கட்சி இன்றுவரை நிலைத்துள்ளது என்பதை கருதுகோளாகக் கொண்டு தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சியில் அக்கட்சி தலைமைத்துவங்களினால் ஏற்படுத்தப்பட்ட தலைமைத்துவ சிறப்புக்களை வெளிப்படுத்தல், தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட சேவைகளை அடையாப்படுத்தல் என்பவற்றை பிராதான நோக்கமாகவும் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இன்றுவரை நிலைத்து இருப்பதற்றகான வரலாற்று பின்புலத்தை அடையாளப்படுத்தல். இலங்கை வரலாற்றில் அமுக்க குழுவாக தொழிற்படும் வரலாற்றை வெளிப்படுத்தல் போன்றவை நோக்கமாகவும் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துணை இவ்வாய்வு பாராளுமன்ற அறிக்கைகள், நேரகாணல்கள், கள ஆய்வுகளை முதன்நிலைத் தரவுகளாக கொண்டும். இதர நூல்கள், இதழ்கள், பத்திரிக்கைகள், இணைத்தளங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற தகவல்களை இரண்டாம்நிலைத் தரவுகளாக கொண்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பான ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமையும்.