dc.description.abstract |
புராதன காலத்து இலங்கையில் பிராமணர்கள் ஒரு உயர்வான சமூகத்தினராக இருந்துள்ளதனையும், அவர்களின் செல்வாக்கானது அடித்தட்டு மக்கள் முதல் நாட்டை ஆளும் மன்னர்கள் வரை பரந்துபட்டிருந்ததனையும் இலங்கையின் இலக்கிய ஆதாரங்களும், சாசனங்களும் உறுதிப்படுத்திக் கூறுகின்றன. விஜயனின் வருகை மற்றும் பண்டுகாபயனின் காலம் முதல் அவர்கள் இலங்கையில் இருப்புக் கொண்டமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவின் நடைமுறைக்கு ஒப்பாக இலங்கையிலும் சமயம், அரசியல், சமூகக் கட்டமைப்புக்களில் பிராமணர்களின் வகிபங்கானது சிறப்பிடம் பெற்றிருக்குமாற்றை ஆராய்ந்தறிவதும், வட இந்தியாவில் பிராமணர்களால் தோற்றுவிக்கப்பட்டு சமூக அமைப்பில் உன்னத நிலையில் பின்பற்றப்பட்ட வரணப்பாகுபாடானது புராதன காலத்து இலங்கையில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் தொடர்பாக அறிவதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும். இலங்கையில் புராதன காலப்பகுதியில் பிராமணர்கள் அனுசரித்து, பொறுப்பினையும் சமய சமபிரதாயங்களை கிரியையாற்றுபவர்களாக மட்டுமல்லாமல் நாட்டை நிர்வகிக்கும் ஏற்றிருந்ததுடன். மன்னர்களின் அமைச்சர்களாகவும். புரோகிதர்களாகவும், ஆசிரியர்களாகவும் (குருமார்கள்). வைத்தியர்களாகவும் பதவி வகித்துள்ளனர் என்பதனை எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபித்துக் கொள்ள முடிகின்றது. மேலும் தானங்களை வழங்குதல், பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றிலும் இவர்கள் முன்னுரிமை பெற்றிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவற்றின் மூலம் இலங்கை சமுதாயத்தில் பிராமண குலத்தவர் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரிவினராக விளங்கினர் என்பதனை உறுதிப்படுத்துவதோடு, புராதன காலத்து இலங்கையில் வாழ்ந்த பிராமணர்கள் பற்றிய போதிய ஆதாரங்கள் சேகரித்து, ஆதிகால இலங்கையில் வடஇந்திய சமுதாயத்தில் பின்பற்றப்பட்ட பிராமணர்கள். சத்திரியர்கள், வைசியர்கள். சூத்திரர்கள் என்ற வர்ணவேறுபாடு எனும் சமுதாய பிரிப்பு கொள்ளை எந்தளவுக்கு நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்பதனை அறுதியிட்டுக் கூறுவதாக இவ்வாய்வு அமையப்பெறும் |
en_US |