Abstract:
இலங்கையில் புராதன காலம் முதலாக பரதவர் என்ற சமூகப் பிரிபினர் வாழ்ந்துள்ளனர். பரதவர் என்போர் மீன்பிடியை பிரதான தொழிலாகக் கொண்டதுடன் வாணிபம், முத்துக்குளிப்பு. சங்கு குளிப்பு என்பவற்றிலும் ஈடுபட்டவர்களாவர். இந்த நடவடிக்கைகள் இலங்கையில் பரதவர் குடியிருப்புகள் ஏற்படுவதற்கு ஏதுவாயிருந்தன சமகாலத்தில் இம்மக்கள் பரவி வாழ்கின்ற போதிலும் இவர்களது வரலாறு, சமூக, பண்பாட்டு அம்சங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படாததாகவே காணப்படுகிறது. உடப்புக் கிராமத்தில் வாழும் பரதவர்களின் சமூக, பண்பாட்டு அம்சங்கள் சழத்தின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகின்றவிடத்து தனித்துவமாகக் காணப்படுகிறது. இவர்களது தோற்றம், இடப்பெயர்வு, சமூகப்பிரிவுகள், சமூக, பண்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கு வரலாற்றியல் ஆய்வோடு, ஒப்பியல் ஆய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. கிராமிய தெய்வ வழிபாடு, இவர்களால் அமைக்கப்பட்ட ஆலயங்கள் தென்னிந்திய சாயலை ஒத்ததாக காணப்படுகிறது. பிறப்பு, திருமணம், இறப்பு என்பவற்றில் மேற்கொள்ளப்படும் சில சடங்குகள் இலங்கையில் வேறு பிரதேசங்களில் காணப்படவில்லை. மீனபிடி பிரதான தொழிலாக காணப்படுவதோடு, மீன்பிடித் தொழிலுக்காக பாடப்படும் அம்பாப பாடல் முக்கியம் பெறுகிறது. இவர்களது தீ மிதிப்பு விழாவில் தனிச்சிறப்பம்சம் காணப்படுகிறது. நாயக்கர் கால கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை என்பன விஜயநகர கலைப் பரதவர் இலங்கையிலுள்ள பண்பாட்டம்சங்களை பாணியை ஒத்ததாகும். உடப்பில் ஏனைய காணப்படும் இந்துகளை விட தனித்துவமான கொண்டிருக்கின்றனர். இவர்கள் கிராமத்தில் வசிப்பதால் இவர்களது பண்பாட்டம்சங்கள் வெளியுலகிற்கு தெரியாத நிலையில் காணப்படுகிறது. காரணமாக தற்போது ஆனால் இவர்கள் தங்களது நவீன தொடர்பாடல் வரலாறுகளையும். பண்பாட்டம்சங்களையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்துகின்றனர். எனினும் இந்த சமூகத்தவரால் பேணப்பட்ட பாரம்பரிய முறைகள் வெளியுலக தொடர்பினால் அதன் தனித்துவத்தை இழந்துள்ளது.