Abstract:
தற்கால உலகில் இடப்பெயர் ஆய்வானது வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகும். ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் இவ்வாய்வானது குறிப்பிடத்தக்க அளவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான ஆய்வுகள் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யப்படுமானால் பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் அந்தவகையில் மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் காணப்படும் இடப்பெயர்கள் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டமைந்துள்ளது. பட்டிப்பளைப் பிரதேச இடப்பெயர்கள் கூறும் செய்திகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இடப்பெயர் தோன்றியமைக்கான காரணங்களைக் கண்டறிவதோடு அவை தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்துதலே இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கு வரலாறுசார் ஒப்பியல் அணுகுமுறை பயன்படுகின்றது. மேலும் பட்டிப்பளைப் பிரதேச இடப்பெயர்கள் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டமைந்ததா? அப்பிரதேச வரலாற்றுத் தனித்துவம் புலப்படுகின்றதா என்ற ஆய்வு வினாவினையும் கொண்டதாக கட்டமைக்கப்பட்டள்ளது. மேலும் இங்குள்ள ஆரம்பகால பெயர்கள் அனைத்தும் இயற்கையுடன் நெருங்கிய தொடர்புகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அவை நீர்நிலை. நிலப்பண்பு, தாவரம். விலங்கு, பறவை என்பவற்றால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் உள்ள பெயர்களில் ஈற்றில் வரும் சொல்லாக தாவர, விலங்குப் பெயர்களைச் சூட்டியதாகவும் நில, நீர் பெயர்கள் பல்வகையில் இவ்விற்றில் வரும் சொற்களாக உள்ளன. அந்தவகையில் இவ்வாய்வு இப்பிரதேசம் பற்றிய வரலாறுகளை அறிந்து கொள்ளவும் ஆவணப்படுத்தலின் தேைைவயை உணர்த்துவதற்கும் அடிப்படையாய் அமைகின்றது.