Abstract:
"பெற்றோர்கள் வெளிநாடு செல்வதனால் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கு ஏற்படும் வீட்டு சூழல் சார் பிரச்சினைகள் சுற்றல் அடைவு மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம்" எனும் தலைப்பில் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இல் ஆய்வினை மேற்கொள்ள திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை கல்விக் கோட்டத்தில் உள்ளடங்கும் 43 பாடசாலைகளில் IAB,1C. மற்றும் வகை !! பாடசாலைகள் 36 காணப்படுகின்றது. இவற்றில் படையாக்க மாதிரியின் அடிப்படையில் 4.1 என்ற விகிதத்தில் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் நோக்க மாதிரியின் அடிப்படையில் 19 அதிபர்களும், பெற்றோர்கள் வெளிநாடு சென்ற 80 மாணவர்களும், இவ் மாணவர்களின் 80 பாதுகாவலர்களும், 60 ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளளர் பெற்றோர்கள் வெளிநாடு செல்வநனால் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கு ஏற்படும் வீட்டு சூழல் சார் பிரச்சனைகளை இனங்கண்டு அவை கற்றல் அடைவு மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் முன்வைத்தல், எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் வினாக்கொத்து, நேர்காணல் படிவம். ஆவணங்கள் போன்ற ஆய்வுக் கருவிகளின் ஊடாக பெறப்பட்டு அளவு, பண்பு ரீதியான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு எண்சார் தகவல்களாக மாற்றப்பட்டு அட்டவணையாக்கம், சலாகை வரைபுகள், வட்ட வரைபுகள் மூலமாக புள்ளிவிபரமாக்கப்பட்டு விளக்கப்படுகின்றது. இதற்காக Microsoft Excel எனும் முறை பயன்படுத்தப்பட்டு இலக்கிய மீளாய்வில் பெறப்பட்ட விடயங்களுடன் வியாக்கியானமும். கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும், பெற்றோர்கள் வெளிநாடு சென்ற மாணவர்கள் வீட்டு குழல்சார் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். இவ் மாணவர்களிடம் வேறுப்பட்ட நடத்தை மாற்றம் காணப்படுகின்றது. மாணவர்களின் அடைவுமட்டம் குறைவாக காணப்படுகின்றது. பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை சேவை வினைத்திறன் மிக்க வகையில் இடம்பெறுவதில்லை, பாடசாலையில் விழிப்புணர்வு ஊட்டும் வகையிலான கருத்தரங்குகள் குறைவாக நடாத்தப்படுகின்றது. பாதுகாவலருக்கு மாணவர்களின் சுற்றல் தொடர்பான அக்கரையின்மை எனும் முடிவுகள் பெறப்பட்டு அவற்றுக்குறிய விதப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் சிறந்த அடைவினை பெறுவதில் பெற்றோருடன் கூடிய ஆரோக்கியமான வீட்டு சூழல் அவசியமாகும்