dc.description.abstract |
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வினைத்திறனான கற்பித்தலை மேற்கொள்வதில் கற்பித்தல் துணைச்சாதனங்களின் பங்களிப்பு" எனும் தலைப்பில் அளமந்த இவ்வாய்வானது மண்முனைத் தென் எருவில் பற்று கல்விக் கோட்ட ஆரம்பப்பிரிவு பாடசாலைகளை மையமாக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வாகும். இது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வினைத்திறளான கற்பித்தலை மேற்கொள்வதில் சுற்பித்தல் துணைச்சாதனங்களின் பங்களிப்பைக கண்டறிவதனை நோக்காகக் கொண்டு இடம்பெற்றுள்ளது. மணமுளை தெள்ளருவில் பற்றுக் கோட்டமானது 37 பாடசாலைகளைக் கொண்டு காணப்படுகின்றது. இதில் ஆரம்பப்பிரிவுகளை கொண்ட 33 பாடசாலைகளில், பாடசாலைகள் தரங்களின் அடிப்படையில் படையாக்கம் செய்யப்பட்டு அதில் 3:1 என்கின்ற விகிதத்தில் இலகு எழுமாற்று விகிதத்தில் 11 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து 11 அதிபர்களும், 75 ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடம் இருந்து வினாக்கொத்து அவதானம் போன்ற ஆய்வுக் கருவிகளின் ஊடாக பெறப்பட்ட அளவு ரீதியான, பண்பு ரீதியான தரவுகள் அனைத்தும் Microsoft excel மென்பொருளின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் வகை குறித்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வினைப் பொறுத்தவரை ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் பாரம்பரிய கற்பித்தல் துணைச்சாதனங்களான கரும்பலகை. பாடநூல், ஆசிரியர் கைநூல் தங்கியுள்ளனர்களே என்பவற்றிலே துணைச்சாதனங்களை பயன்படுத்துவதில்லை. தவிர வேறு கற்பித்தல் இதனால் கற்பிக்கும் விடயங்களை மாணவர்கள் விளங்கிக் கொள்ள முடியாமை, கற்றலில் ஆர்வமின்மை, ஆசிரிய மாணவ இடைத்தொடர்பு குறைவு போன்ற தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அதனைத் தொடர்ந்து கற்பித்தல் துணைச்சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளது. |
en_US |