Abstract:
"கட்டிளமைப்பருவ மாணவர்களுக்கான பாலியற் கல்லியைக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்"எனும் தலைப்பில இவ்லாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது கட்டிளமைப்பருவ மாணவர்களுக்கான பாலியற் கல்வியை கற்பிப்பதில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக குருநாகல் கிரியுல்ல கல்வி வலயத்தின் நக்காலத்த கல்விக் கோட்டத்தில் உள்ள 05 தமிழ்மொழி மூல பாடசாலைகள் ஆய்வுப் பின்னணியினை அடிப்படையாகக் கொண்டு நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டணம் ஆய்வு மாதிரிகளாக 06 அதிபர்கள் மற்றும் 07 சுகாதாரப்பாட ஆசிரியர்கள் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதோடு, 2:1 எனும் விகிதத்தில் 60 ஆசிரியர்களும், 31 எனும் விகிதத்தில் 175 மாணவர்களும் படையாக்கப்பட்ட மாதிரி தெரிவின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர் ஆய்வுக்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் Microsoft Excel மூலம் பகுப்பாய்வுக்குற்படுத்தப்பட்டு பல்வேறு முடிவுகளும் பெறப்பட்டன. அதனடிப்படையில் ஆய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளாக தற்போது கட்டிளமைப்பருவ மாணர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள், முறையற்ற தொடர்புகள், பாலியல்சார் நோய்கள், இளவயது கர்ப்பங்கள், கல்வியில் பின்தங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்றும் இதற்கான அடிப்படைக் காரணம் மாணவர்களுக்கு பாடசாலையில் முறையாக பாலியல் சார் விடயங்களை ஆசிரியர்கள் கற்பிப்பதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர் பாலியஸ்சார் விடயங்களை கற்பிக்காமைக்கான காரணங்களாக ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கலாசார ரீதியான தடை, போதியளவு பயிற்சியின்மை, போதுமானளவு கற்பித்தல் வளங்கள் காணப்படாமையால் பொருத்தமான கற்பித்தல் முறையை பயன்படுத்த முடியாமை, குறைவான நேரம், பாடசாலையின் ஒத்துழைப்பின்மை, மாணவர்களது எதிர்மறையான துலங்கல்கள், ஆசிரியர்களது அக ரீதியான காரணங்கள், சுகாதாரப்பாடத்தில் பாலியற் கல்வி பற்றிய சரியான விளக்கமின்மை மற்றும் சுகாதாரப்பாடத்திற்கென்று தனித்த பாடத்திட்டம் இன்மை போன்ற சவால்களுக்கு உற்படுகின்றனர் என்பது தரவுகளிலிருந்து கண்டறியப்பட்டது. ஆகவே இதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகுதல், ஆசிரியர்களுக்கு போதியளவு வளங்கள், பயிற்சிகள், ஒத்துழைப்புக்கள், என்பவற்றை பாடசாலைகள் வழங்குவதோடு, சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல், பாலியற் கல்விக்கென்று தனித்த பாடத்திட்டம் ஒன்று கொண்டு வருவதோடு இது தொடர்பான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கமும் கவனம் செலுத்தல் போன்ற பல விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.