dc.description.abstract |
"பாடசாலை மட்டக் கணிப்பீட்டை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதில் கனிஷ்ட இடைநிலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அளவை நிலை ஆய்வாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை மட்டக் கணிப்பீட்டுத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையும் இத்திட்டத்தினூடாக அடைய எதிர்பார்க்கப்பட்ட இலக்கும் பல்வேறு சவால்களின் பின்னணியில் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கலைத்திட்ட வளர்ச்சியில் மையநாயகராக விளங்கும் ஆசிரியர்கள் கணிப்பீடுகளை சிறப்பாக முன்னெடுப்பதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவரது பண்பு சார் கற்றல் விளைவுகளை அளவீடு செய்வதில் கணிப்பீடு முக்கியம் பெறுவதனால் இதில் ஆசிரியர்களுக்கு தடையாக அமையும் காரணிகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் இவ் ஆய்வின் நோக்கமாகும். இதன்படி இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக குருநாகல் மாவட்ட கிரியுல்ல கல்வி வலயத்தின் நக்காவத்த கல்விக் கோட்டத்தில் உள்ள 05 தமிழ் மொழி மூல பாடசாலைகள் ஆய்வுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்கான ஆய்வு மாதிரிகளாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில் பாடசாலை தெரிவு செய்யப்பட்டதற்கமைவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டதுடன் ஆசிரியர்கள் ஆண், பெண் என படையாக்கப்பட்டு 4:1 என்ற அடிப்படையில் 31 பேரும், மாணவர்கள் ஆண், பெண் என படையாக்கப்பட்டு 10:1 என்ற அடிப்படையில் 103 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகனாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம், ஆவணச்சான்றுகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளின் ஊடாக பகுப்பாய்வு, வியாக்கியானம். கலந்துரையாடல் பகுப்பாய்வின் போன்ற செயற்பாடுகளுக்குள் முடிவுகளும் பல்வேறு மூலம் உள்வாங்கப்பட்டதுடன் கண்டறியப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கணிப்பீடுகளை வினைத்திறனாக செயற்படுத்துவதில் மாணவர் ஈடுபாடு, வளங்கள், பாடத்திட்ட பணிகள், நேரம், சமூக ஒத்துழைப்பு, பெற்றோர் தொடர்பு, போன்றன வழிகாட்டல்கள் எதிர்மறையான தாக்கத்தினை விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஆசிரியர்கள் சரியான முன்திட்டமிடலுடன் கிடைக்கப் பெறுகின்ற வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பாடசாலை சமூகத்துடன் உயிரோட்டமான தொடர்பாடலொன்றைக் கட்டியெழுப்புவதனூடாக கணிப்பீட்டினை சிறப்பாக நடாத்துவதற்கேற்ற வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |