Abstract:
"கனிஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு கணித பாடக் கற்பித்தலை மேற்கொள்வதில் ஆசிரியர் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது அளவை நிலை ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் தற்காலச் சூழலில் நவீன் கற்பித்தல் சாதனங்களுக்கான பற்றாக்குறை, மாணவர்களின் ஆர்வமின்மை. அடிப்படை எண்ணக்கருக்கள் தொடர்பான முன்னறிவின்மை முதலிய காரணங்கள் ஆசிரியர்களுக்கு акитесла அமைகின்றன. இதனால் மாணவர்கள் தவணைப் பரீட்சைகளில் பெறுகின்ற கணிதப்பெறுபேறுகள் தாழ்வாகனே காணப்படுகின்றன. இந்நிலையில் கனிஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு கனித பாடக் கற்பித்தயினை வினைத்திறனாக மேற்கொள்வதில் ஏற்படும் தடைகளை இனங்கண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் இவ்வாய்வின் நோக்கமாகும். இதனடிப்படையில் ஆய்வினை மேற்கொள்வதற்காக தெஹியோவிற்ற கலவி வலயத்திற்குட்பட்ட தெஹியோவிற்ற கோட்டத்திலுள்ள தமிழமொழி மூலம் பாடசாலைகள் நோக்கமாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இல் ஆய்விற்கான ஆய்வு மாதிரிகளாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிபர்கள் நோக்கமாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டதுடன், கணித பாடம் கற்பிக்கும் 36 ஆசிரியர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையிலும், 110 மாணவர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரியின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்வுக்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம். ஆவணச்சான்றுகள், போன்றன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாக பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் Microsoft office, Excel முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அட்டவணைகள், உருக்கள் என்பவற்றின் அடிப்படையில் முடிவுகள் பெறப்பட்டன. அதனடிப்படையில் மாணவர்களின் ஆர்வம் குறைவு, அடிப்படை கணித எண்ணக்கருக்கள் தொடர்பான முன்னறிவின்மை, நவீன கற்பித்தல் சாதனங்களுக்கான பற்றாக்குறை, நவீன கற்பித்தல் முறைகள், நுட்பங்கள் பயன்படுத்தாமை போன்ற முக்கியமான முடிவுகள் வினாக்கொத்து பகுப்பாய்வின் மூலம் கணிடறியப்பட்டுள்ளதுடன், விதப்புரைகளும் அவற்றுக்கான இவ்வாய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கணிதபாட கற்பித்தலின்போது நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் நுட்பங்களை கையாள்வதால் மாணவர்களின் ஆரவத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்குமென்ற முன்வைக்கப்பட்டுள்ளன