Abstract:
"க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டமும் அதில் தாக்கம் செலுத்தும் பாடசாலை சார் செயற்பாடுகளும்" என்னும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வானது புக்குடியிருப்பு நல்லிக்கோட்டத்திலுள்ள உபொத சாதாரண தர மாணவர்கள் கணித பாட அடையை அடைவதில் எலான பாடசாலைகள் aitit செயற்பாடுகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதனை இணங்கண்டு, அதற்கான காரணங்களை அறிவதுடன், அதற்கான தீர்வுகளை முன்மொழிதலை நோக்கமாகக் கொண்டு இடம் பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக புதுக்குடியிருப்பு கல்விகோட்டமானது ஆய்வாளரினால் தெரிவு செய்யப்பட்டது. இவ் கோட்டத்தில் உள்ள 25 பாடசாலைகளுள் இவற்றில் இருந்து நோக்க மாதிரியின் அடிப்படையில் 07 பாடசாலைகளும், அப்பாடசாலைகளின் 07 அதிபர்களும்,ஈ.பொ.த சாதாரண தரத்திற்கு கணிதம் கற்பிக்கின்ற 25 ஆசிரியர்காளும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்கள் பால்நிலை வேறுபாட்டிற்கேற்ப படையாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் 5:1 எனும் விகிதத்தில் 110 மாணவர்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். எளிய எழுமாற்று மாதிரியின் மூலம் 9.1 எனும் அடிப்படையில் 60 மாணவர்களின் பெற்றோர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்வில் வினாக்கொத்து, நேர்காணல் ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அவை அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுகளின் பகுப்பாய்விற்காக Microsoft Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இவ் ஆய்வு முடிவுகளின் பிரகாரம், க.பொ.த சாதாரண தர மாணவர்கள் கணிதபாட அடைவில் தாக்கம் செலுத்தும் பாடசாலைகள் சார் செயற்பாடுகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கணிதபாட அடைவுமட்டம் தொடர்ந்து 05 பாடசாலைகளில் குறைவான காணப்படுகின்றது. இதற்கு அடிப்படை கணித அறிவு குறைவாக உள்ளமை, பாடசாலைகளில் கணிதம் கற்பிப்பதற்கு நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமை, மாணவர்கள் மேலதிக பயிற்சிகளை ஒழுங்காக நிறைவு செய்யாமை. கணித பாடத்தில் மாணவர்கள் விடுகின்ற தவறுகளுக்கு ஏற்ப உரிய பின்னூட்டல் வழங்காமை, கற்பித்தலின் போது பொருத்தமான உபகரணங்கள் பயன்படுத்தாமை. க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு முந்தைய வகுப்புக்களில் கணிதத்தில் மாணவர்கள் குறைவான தேர்ச்சிநிலையில் காணப்படல். போன்ற பிரச்சனைகளும், பாடசாலை சார் செயற்பாடுகளும் ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டதுடன் அது தொடர்பான வழிகாட்டல் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.