dc.contributor.author |
சரவணமூர்த்தி, கிருஷ்ணவேனி |
|
dc.date.accessioned |
2024-04-17T05:44:55Z |
|
dc.date.available |
2024-04-17T05:44:55Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC1163 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15395 |
|
dc.description.abstract |
எதிர்கால சந்ததியினரை சிறந்த கலவியறிவு கொண்டவர்களாக உருவாக்குவதில் சுற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன் அடிப்படையில் "கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தலில் தமிழ்ப்பாட ஆசிரியர் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வின் முக்கிய நோக்கம் பரிகாரக் கற்பித்தலில் தமிழ்ப்பாட ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான விதந்துரைப்புக்களை முன்மொழிவதாகும். திருகோணமலைக் கோட்டத்திலுள்ள 43 பாடசாலைகளிலிருந்து படையாக்கம் செய்யப்பட்ட பின்னர் இலகு எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் ஒன்பது பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் IAB பாடசாலைகள் இரண்டும் IC பாடசாலைகள் நான்கும் வகை- பாடசாலைகள் மூன்றும் உள்ளடங்குகின்றன. நோக்க மாதிரியின் அடிப்படையில் ஒன்பது பாடசாலைகளின் அதிபர்களும் மற்றும் தமிழ்ப்பாட ஆசிரியர்களும், படையாக்கம் செய்யப்பட்ட பின்னர் இலகு எழுமாற்று மாதிரியின் மூலமாக கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், ஆவணம் போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தரவுகள், தகவல்கள் பெறப்பட்டு அவை பண்பு ரீதியான மற்றும் அளவு ரீதியான Microsoft Excel படி முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுப்பகுப்பாய்வு முறை மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளாக ஆசிரியர்கள் நவீனக் கற்பித்தல் முறையை பயன்படுத்துவது குறைவு, ஆசிரியருக்கு நேரம் போதாமை, மாணவர்கள் ஒத்துழைப்பின்மை, மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு, மாணவர்களின் வரவு குறைவு போன்ற பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டன. அதன்படி கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தலில் தமிழ்ப்பாட ஆசிரியர்கள் அதிக சவாலினை எதிர்நோக்கும் நிலை கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்ப்பாட ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவாலினை குறைக்கும் நோக்கில் விதந்துரைப்புக்களும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
மெல்லக் கற்கும் மாணவர்கள் |
en_US |
dc.subject |
பரிகாரக் கற்பித்தல் |
en_US |
dc.subject |
ஆசிரியர் எதிர்நோக்கும் சவால்கள் |
en_US |
dc.title |
"கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தலில் தமிழ்ப்பாட ஆசிரியர் எதிர்நோக்கும் சவால்கள்” |
en_US |
dc.type |
Thesis |
en_US |