dc.description.abstract |
"க.பொ.த சாதாரண தர மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் திறன் வகுப்பறைகளின் செல்வாக்கு" எனும் தலைப்பில் மட்டக்களப்பு கள்ளி வலயத்தில் உள்ள மூன்று கோட்டங்களில் ஒன்றான மண்முனை வடக்கு நல்விக் கோட்டத்தில் இவ்வாவைநிலை ஆய்யானது இடம்பெற்றுள்ளது.திறன் வகுப்பறைகள் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் ஏற்படுத்தும் செல்வாக்கினை அறிந்து நிறள் வகுப்பறையினை ஆசிரியர்கள் மாணவர்களின் ஈற்றவில் பயன்படுத்தாமைக்கான ஆராய்வதூடாக கல்விச் சமூகத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது.ஆய்வினை மேற்கொள்வதற்காக மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தில் உள்ள திறன் வகுப்பறைகள் கொண்ட பாடசாலைகளும் 9 அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளனர், மேலும் .பொ.த சாதாரண தரம் கற்பிக்கும் 311 ஆசிரியர்களிளை படையாக்க மாதிரியினை பயன்படுத்தி ஆண்,பெண் என வகைப்படுத்தியதன் அடிப்படையில் 109 ஆசிரியர்கள் 31 எனும் விகிதத்திற்கமைவாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அந்துடன் க.பொ.த சாதாரண தரம் கற்கும் 1300 மாணவர்களிளை வகுப்பு ரீதியாக ஆண் பெண்ணாக படையாக்கம் செய்து அதில் இருந்து 10 சதவீதமான 130 மாணவர்கள் தெரிவு செய்து ஆய்விற்குட்படுத்தப்பட்டனர். மேலும் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளின் ஆய்வு நோக்கத்திற்கமைய வினாக்கொத்து ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதுடன் நேர்காணல் மூலம் அதிபர்களிடம் இருந்து தரவு பெறப்பட்டது.அவதானிப்பு படிவம் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டு திறன் வருப்பறை மற்றும் சாதாரன வகுப்பறை தொடர்பான பல விடயங்கள் ஒப்பிடப்பட்டது.பெறப்பட்ட தரவுகள் அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்விற்குட்பட்டது. Ms Excel மூலம் தரவுப்பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்ட தரவுகள் சலாகை வரைபு,வட்ட வரைபு மற்றும் அட்டவணைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் திறன் வகுப்பறையில் நடைபெறும் கற்றல் சாதாரண வகுப்பறைக் கற்றலுடன் ஒப்பீட்டளவில் வினைத்திறனாக காணப்படுகின்றது எனும் முடிவினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்தது.மேலும் போதிய பயிற்சி இன்மை,தொழில் நுட்ப கருவிகளினை பயன்படுத்துவதில் ஏற்படும் சிரமம்,திறன் வகுப்பறையில் கற்றலை மேற்கொள்ள 40 நிமிடங்கள் போதாமை,திறன் வகுப்பறையில் நம்பிக்கையின்மை போன்றன திறன் வகுப்பறையினை ஆசிரியர்கள் பயன்படுத்தாமைக்கான கரணங்களாக கண்டறியப்பட்டன. இதற்கான விதப்புரைகளாக பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பயிற்சிகளும் திறன் வகுப்பறை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் வழங்குதல், மாணவர்களின் கற்றல் திட்டமிடலில் TIPமாதிரி பயன்படுத்தப்படல், ஆசிரியர்களின் பயிற்சி தேவையை TNA பகுப்பாய்வின் மூலம் அறிதல் போன்றன அடையாளப்படுத்தப்பட்டன. |
en_US |