Abstract:
மனிதகுலம் தோன்றியது முதல் அவனோடு இணைந்து பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் தோற்றம் பெற்று விட்டனட அந்த அடிப்படையில் மனிதனுக்குள் ஏற்பட்ட இமை புரியாத உணர்வுகள் சமயத்தை தோற்றுவிக்க வழி செய்தன அதனைத் தொடர்ந்து சடங்கு முறைகளின் அடிப்படையில் நம்பிக்கைகளும் தோற்றம் பெற்றன. அன்று தோற்றம் பெற்ற நம்பிக்கைகள் மனிதனை சீரதிருத்தவே அமைந்தன. மனிதனை ஒரு சமூகப் பிராணியாக நடத்துவதற்கு நம்பிக்கைகள் துணை செய்தன இவை நன்மை பயக்கும் நம்பிக்கைகள் தீமை ஏற்படுத்தும் நம்பிக்கைகள் என்று காலப்போக்கில் திரிபடைந்தன. எனவே இரு நம்பிக்கைகள் சமூகம் நவீன மயமாக்கப்பட்டதன் பின்னர் பல திருப்பங்களுடன் சமூக மத்தியில் பரவலடைந்தன அவ்வகையில் கிராம மக்களின் வாழ்க்கையிலேயே நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக காணப்படுகின்றன. அங்கையில் கிரிவந்தனை பிரதேச மக்கள் தான் வாழ்வில் இடம் பெறும் அனைத்து விடயங்களுக்கும் ஏதோ ஒரு அமானுஸ்ய சக்தி காரணம் என்ற ஒரு மனோபாவத்தில் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சமூக ரீதியிலும் அந்தஸ்து ரீதியிலும் பின்னடைவில் இருப்பதற்கு இவ்விடயங்கள் காரணமாக அமைகின்றடை எந்த ஒரு மனிதனாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விடயம் அவன் பார்த்து அச்சம் படும் விடயம் அவமானம் ஆகும். இந்த அவமானங்கள் மூட நம்பிக்கைகளின் மூலமாக இங்கு உள்ள மக்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றன. முதியோர்களின் ஆதிக்கம் அதிகமாக சமூகத்தில் காணப்படுவதினால் அனைவரும் பழமையான நம்பிக்கைகளுக்கு பழக்கப்படுகின்றனர் நம்பிக்கைகள் எனும் போது அவை அனைத்துமே நீமையை ஏற்படுத்தும் நம்பிக்கைகள் அல்ல மாறாக நன்மையைச் செய்யும் நம்பிக்கைகளும் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விடுத்து இவர்கள் பாதிப்பினை ஏற்படுத்தும் நம்பிக்கைகளிலே அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். அவற்றினை: பின்பற்றியும் வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் பழமையான பாரம்பரிய நம்பிக்கைகளினாலும் ஒரு சில பழக்க வழக்கங்களிளாலும் பல இன்னல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து உள்னைர். இவ்விடயங்களை தீர ஆராய்வதற்காகவும் இவற்றிற்கான காரணங்களை கண்டறிவதற்காகவும் எவ்வாறான நம்பிக்கைகள் இவர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாதவை ஆக காணப்படுகின்றன ? என்பதை அறிவதற்காகவும் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் பழமையான நம்பிக்கைகள் தொடர்பாக அவர்களின் என்னங்கள் அவர்கள் முகம் கொடுத்த சவால்கள் என்ன வகையான நம்பிக்கைகளில் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். என்பதனை கண்டறியும் பொருட்டு இவர்களின் பிரச்சினைகள் அதாவது அடிப்படையான காரணிகளை வெளிக்கொணர்ந்து அதற்கான தீர்வுகளையும் பரிந்துரைகளையும் முன்பைப்பதாக இவ் ஆய்வு அமைகின்றது. இதன் அடிப்படையில் சமூகவியல் சிறப்பு கற்கையின் இறுதி வருடத்தை பூர்த்தி செய்யும் முகமாக "பழமையான நம்பிக்கைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை மையமாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு- 2023" எனும் தலைப்பில் ஆய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தரவுகள் எளிய எழுமாற்று மாதிரியை பயன்படுத்தி வினாக்கொத்து, கலந்துரையாடல் பங்குப்பற்றல் அவதானம் செவ்விக்காணல் எனும் முறைமைகளுக்கு ஊடாக தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியான முறைகளின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு இப் பழமையான நம்பிக்கைகள் எவ்வாறான ஒரு சவாலாக அமைகின்றன. என்பதை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு தொடர்பான உண்மை இனங்காணப்பட்டுள்ளன.