Abstract:
மலையகத் பெருந்தோட்டம் என்பது ஒரு சமுதாயக்கட்டமைப்பினை கொண்டிராமல் இன்னமும் ''பெருந்தோட்டத்துறை" என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள நிர்வாக கட்டமைப்பு எனும் போது தேயிலைத் தொழில் துறையுடன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. இவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுபடுத்தும் இடமாக தோட்ட நிர்வாகமே இருக்கின்றது. வீட்டுரிமை இல்லை, வருமானம் குறைவு, சொந்த தொழில் இன்மை போன்ற அடிப்படையான விடயங்கள் இங்கு காணப்படுவதில்லை. அரசியல், பொருளாதாரம் பண்பாடு, கல்வி என அனைத்து விடயங்களில் இருந்தும் பெறக்கூடிய நன்மைகளுக்கு அத்தோட்டங்களில் தடைகள் காணப்படுகின்றது. இவ்வாறான பிரச்சனைகள் காணப்பட்டாலும் மிக முக்கியமாக மலையகத் தோட்ட பெண்கள் பால்நிலை ரீதியான பிரச்சனைகளையும் எதிர்நோக்குகின்றார்கள். சமுதாய அமைப்பினை கொண்டிராத மலையகத்தோட்டங்களிலும் இவ்வாறான பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றார்கள் வீட்டுத்தளம், வேலைத்தளம், சமூக, பொருளாதார, அரசியல், கலாசாடி ரீதியாகவும் பாலநிலைச்சார்ந்த இவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள். மலையகத்தோட்டப் பெண்கள் எதிர்நோக்கும் பால்நிலைச்சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்து அதற்கான தீரவுகளையும், பரிந்துரைகளையும் முன்வைப்பதாக இவ்வாய்வு அமைகின்றது. இந்த அடிப்படையில் சமூகவியல் சிறப்பு கற்கையின் இறுதி வருடத்தை பூர்த்திச் செய்யும் முகமாக "மலையகத் தோட்டப் பெண்கள் எதிர்நோக்கும் பால்நிலைச்சார்ந்த பிரச்சனைகளை 475து எல்பத்த கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு 2023" எனும் தலைப்பில் இவ்வாய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான தரவுகள், எளிய எழுமாற்று மாதிரியைப் பயன்படுத்தி வினாகொத்து, நேர்காணல், நேரடி தனிப்பட்ட கலந்துரையாடல், பங்குபற்றல் அவதாளம் என்னும் முறைமையியலூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியான முறைகளின் ஊடாக பகுப்பாயவு செய்யப்பட்டுள்ளது பாலநிலை ரீதியாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தரவு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு தொடர்பான உண்மை கண்டறியப்பட்டுள்ளது.