Abstract:
தற்கால சூழலில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்த நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை பெவர் தனித்து தனது குடும்பத்தினை நடாத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும், அதன் மூலம் அப்பெண்ணுக்கு ஏற்படும் நேரடியான பாதிப்புக்களும் அவர்களை சார்ந்து இருக்கின்ற குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு சவால்களுக்கு உள்ளாகின்றனர். இவ் நிலையே மட்டுவில் மத்தி கிராமத்தின் பெண் தலைமைத்துள் குடும்பத்தின் மத்தியில் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இவர்களின் பிரச்சினைகள் பெரும்பாலானவை பால்நிலை சார் காட்டப்படுவதினால் காணமுடிகின்றது. ஏற்படுகின்றதனை பாரபட்சம் சமூகத்தில் ஓரங்கட்டப்படுகின்ற தன்மையும் சமூக அந்தஸ்து கிடைக்காத நிலையும் இப் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் மத்தியில் அதிகளவு காணப்படுகின்றது. அதேபோல பொருளாதார ரீதியான பிரச்சினையாக வேலையின்மை மற்றும் வஊதியம் குறைவான தன்மை போன்றவையும் அதனால் கடன் பெறல், பிறரில் தங்கிவாழ்கின்ற நிலை காணப்படுவதனை அவதானிக்க இதனடிப்படையில் முடிகின்றது. Guan தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூக, பொருளாதார சவால்களை வெளிக்கொணர்ந்து அதற்கான தீர்வுகளையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதாக இவ்வாய்வு அமைகின்றது. இந்த அடிப்படையில் சமூகவியல் சிறப்பு கற்கையின் இறுதி வருடத்தை பூர்த்தி செய்யும் முகமாக "பெர் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூக, பொருளாதார சவால்கள்:- மட்டுவில் மத்தி கிராமத்தை மையப்படுத்திய ஒரு சமூகவியல் ஆய்வு-2023" எனும் தலைப்பில் இவ்வாய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான தரவுகள் எளிய எழுமாற்று மாதிரியைப் பயன்படுத்தி வினாக்கொத்து, கலந்துரையாடல், பங்குபற்றி அவதானம், செவ்லி காணல் என்னும் முறைமையியலுக்கு ஊடாக தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியான முறைகளின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வினூடாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எவ்வாறான சமூக. பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந் சவால்களும் அதற்கான பரிந்துரைகளும் பிவ்வருகின்ற அத்தியாயங்களில் முன்வைக்கப்பட்டு பெண் தலைமைத்தவ குடும்பங்களின் சுமூகமான வாழ்க்கைக்கு உதவுவதாக இவ் ஆய்வு அமைகின்றது.