Abstract:
ஆனைக்கோட்டைக் கிராமத்தில் காணப்படும் சாதியமைப்பு சார்ந்த விடயங்களைப் பற்றியதாக இவ்வாய்வு அமைகிறது. பிராமணர், வேளாளர், சான்றார், தச்சர், வண்ணார். அம்பட்டர், தளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிப்பிரிவுகள் இன்றும் காணப்பட்டே வருகின்றன ஆரம்ப காலங்களில் தொழிலை மையப்படுத்தியே சாதி வகுக்கப்பட்டுள்ளன. அவை கிராம மக்களிடையே அதிகம் பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம். ஏனெனில் அதிகளவிலான நம்பிக்கைகள் அம்மக்களிடையே காணப்படுவதனை அவதாளிக்க முடிகிறது. சாதியத்தின் ஒரு பகுதியான தீண்டாமை பொது இடங்களில் பாராட்டப்படும் நிலை தவிர்க்கப்பட்டது. பொது இடங்களில் தீண்டாமை தகர்த்தப்பட்டு இருப்பினும் இன்னும் அதன் அம்சங்கள் பல தொடர்புபட்டிருப்பதைக் காணலாம். இவ்வாய்வில் திருமணம், வழிபாடு, தீண்டாமை, கல்வி முறைகள் முதலானவற்றில் அனைத்து சாதியினரினதும் நிலைகள் ஆராயப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரம்ப காலங்களை விட தற்காலங்களில் அவர்கள் கொண்ட முன்னேற்றங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் என்பன ஆராயப்பட்டுள்ளது. அவர்களது தொழில் முறைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர்களுக்கான கௌரவம், அந்தஸ்து மறுக்கப்பட்டு தாள வருகின்றது. சாதியம் தொடர்பான பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்று வருவதனை காணமுடிகின்றது. பழைய தலைமுறைகளுக்கு எதிராக செயற்படுவது நிகழ்கால சந்ததியினரால் முடியாத காரியம் ஆகும். சாதியம் தொடர்பான பிற்போக்கு சிந்தனைகளைப் படிப்படியாக குறைப்பதற்கான தீரவுகளையும், பரிந்துரைகளையும் முன் வைப்பதாக இவ்வாய்வு அமைகின்றது.