Abstract:
இன்றைய சமகால சமூகத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஓர் சமூகப் பிரச்சினையாக பாடசாலை இடைவிலகளும் அதன் தாக்கமும் காணப்படுகின்றது. யுத்தம், இயற்கை அனத்தங்கள் அதன் மூலமாக பல ஆண்டுகளாக அனுபவித்துவரும் வறுமைநிலை காரணமாக பாடசாலை இடைவிலகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு ஓர் நிரந்தர தீர்வு காணப்படாமையினால் அப்பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வடிப்படையில் பாடசாலை மாணவர்கள் இடைவிலகுவற்கான காரணம், அது பிரதேசத்தில் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற இன்னும் சில பிரச்சினைகளை ஆராய்வதும், அதற்கான காரணங்கள், அதனால் ஏற்படும் விளைவுகளை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வடிப்படையில் சமூகவியல் சிறப்புக் கற்கையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் முகமாக "பாடசாலை இடைவிலகளும் அதன் தாக்கமும் மண்முனைமேற்கு பிரதேச செயலகத்திற்குள் குறிப்பிட்ட கிராமங்களை மையமாக கொண்ட சமூகவியல் ஆய்வு" எனும் தலைப்பில் இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அய்வுக்கான தரவுகள் எளிய எழுமாற்று மாதிரியை பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், தனியாள் விடய ஆய்வு எனும் முறையியல்களுக்கூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு பண்பு மற்றும் இவை இரண்டும் கலந்த முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. பகுப்பாய்வின் மூலமாக இனங்காணப்பட்ட பாடசாலை இடைவிலகளும் அதன் தாக்கம் என்பன தரவுப் பகுப்பாய்விற்கு இனங்காணப்பட்டது. உட்படுத்தப்பட்டு ஆய்வு தொடர்பான உண்மை ஆய்வுப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட பாடசாலை இடைவிலகளால் எதிர்நோக்கும் சவால்களால் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றதோடு. அவர்களது எதிர்காலமும், எதிர்கால வாழ்வும் பாதிக்கப்படுகின்றது. அதனால் இப்பிரதேசத்திற்கு மிகவும் தேவைப்படும் அவசியமாக இவ்வடிப்படையில் ஆய்வாக இது காணப்படுகின்றது. சிறுவர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடையாளப்படுத்துவதாகவும், சமூகத்திற்கு சவால்களை சிறுவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.