Abstract:
இன்றைய சமகால சமூகத்தில் ஒரு விடயமாக சமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றது. 20 நாடுகளிலும் இச் சம்பவம் காணப்பட்டாலும் இலங்கையிலும் சமூகப் பிரச்சினைகள் காணப்படுகிறது. யுத்தம், வறுமை, இயற்கை அனர்த்தம் போன்றவைகள் காரணமாக இப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமையினால் பிரச்சினைகள் தொடர்கின்றன. இவ்வடிப்படையில் பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம் தொழில் செய்தல், பாலியல் துஸ்பிரயோகம் போன்ற இன்னும் சில பிரச்சினைகளை ஆராய்வதும் அதற்கான காரணங்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வடிப்படையில் சமூகவியல் சிறப்புக் கற்கையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் முகமாக கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை முறையும், சமூகப்பிரச்சினைகளும் -பெரியநீலாவணை பிரதேசத்தை மையமாகக் கொண்ட சமூகவியல் ஆய்வு " எனும் தலைப்பில் ஆய்வுக்கான தரவுகள் நோக்க மாதிரியை பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்காணல், தனியாள் விடய ஆய்வு எனும் முறையியல்களுக்கு ஊடாக தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியான முறைகளினூடாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பகுப்பாய்வின் மூலமாக இனங்காணப்பட்ட சமூக பிரச்சினைகளுக்கான காரணங்கள், அதன் விளைவுகள் என்பன தரவுப்பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு தொடர்பான உண்மை இனங்காணப்பட்டது. ஆய்வுப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட மீனவர் சமூக பிரச்சினைகளினால் சமூகத்தின் மத்தியில் ஆரோக்கியமற்ற தன்மை காணப்படுகின்றது. இதனால் இப் பிரதேசத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்ற ஆய்வாக இது காணப்படுகின்றது. பாதிக்கப்படுகின்ற இவ்வடிப்படையில் மீனவர்களுக்கு ஆய்வானது ஏற்படுகின்ற பிரச்சினைகளினால் விளைவுகளை அடையாளப்படுத்துவதாகவும் மீனவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.