Abstract:
சம காலத்தில் சமூகத்தில் நிகழும் பாரிய பிரச்சிளையாக காணொளி விளையாட்டை வினையாடும் சிறுவர்கள் உடலியல் சார் வன்நடத்தை, கோபம் சார்ந்த வன்நடத்தை, விரோத ரீதியிலான வன்நடத்தை வாய்மொழி ரீதியலான வன்நடத்தை போன்றவற்றை சமூகத்தில் பிரயோகிப்பது இனங்காணப்பட்ட பிரச்சினை ஆகும். இதற்கமைய சிறுவர்களின் வன்நடத்தையில் கானொளி விளையாட்டின் தாக்கத்தை கண்டறியும் முகமாக சிறுர்களின் வன்நடத்தையில் கானொளி விளையாட்டின் தாக்கம்" எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவில் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொக்குவில் பிரதேசம் எட்டு கிராம சேவைப் பிரிவைக் கொண்டு காணப்படுகின்றமையால் இப் பிரதேசத்தில் காணொளி விளையாட்டை விளையாடும் 100 சிறுவர்கள் ஆய்வுசெய்யப்பட்டுள்ளனர். இவ் ஆய்விற்கு சிறுவர்களின் காணொளி விளையாட்டின் தாக்கத்தையும், அவர்களிடம் கானொளி விளையாட்டால் ஏற்பட்டுள்ள தாக்கத்தையையும் கண்டறியும் முகமாகத் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தும், முதலாம் நிலை. இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தரவுகள் ஆய்வுக் கருவியாக சேகரிக்கப்பட்டு தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்களின் வன்நடத்தையில் கானொளி விளையாட்டுக்களின் தாக்கத்தை கண்டறிதல் இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். ஆய்வில் முன்வைக்கப்பட்ட கருதுகோளுக்கு சிறுவர்கள் அதிகம் வன்முறையான காணொளி விளையாட்டுக்களை விளையாடுகிறர்கள். பெண் பிள்ளைகளை விட ஆண்பின்னைகள் அதிகம் காணொளி விளையாட்டுக்களில் உள்ள கதாப்பாத்திரங்களை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். கூட்டுக் குடும்பங்களை விட தனிக் குடும்பத்தில் வசிக்கும் சிறுவர்கள் அதிகம் காணொளி விளையாட்டின் தாக்கத்திற்குள்ளாகின்றார்கள். சிறுவர்களின் வன்நடத்தைக் காரணிகளான உடலியல் காரணி, வாய்மொழிக் காரணி, கோபம் மற்றும் விரோதம் போன்ற காரணிகளில் பால்நிலை அடிப்படையில் வேறுபாடு காணப்படுகின்றது. சிறுவர்கள் வன்முறையான காணொளி விளையாட்டுக்களை மட்டுமன்றி வன்முறையற்ற காணொளி விளையாட்டுக்களை விளையாடுவதாலும் வசிநடத்தைக்குட்படுகிறார்கள். ஆகியன ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் கானொளி விளையாட்டின் தாக்கத்தினால் 44% வீதமான வன்நடத்தையைக் வெளிப்படுத்துகிறார்கள். அதில் 27% வீதத்தினர் வன்முறையான காணொளி வினையாட்டை விளையாடுபவர்களாகவும், 17% வீதத்தினர் வன்முறையற்ற கானொலி விளையாட்டுக்களை விளையாடுபவர்களாகக் காணப்படுகின்றனார்.