Abstract:
இந்த 21ம் நூற்றாண்டில் கால ஓட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு துறையும் தனது இருப்பை உறுதி செய்தே வருகின்றது அந்த வகையில் கண்டி மாவட்டத்துக்கே உரித்தான இரத்தினக்கல், ஆபரண வடிவமைப்பை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படையாகக் கொண்டு எனது இவ்வாய்வானது இந்த ஆய்வானது இரத்தினக்கம், ஆபரண வடிவமைப்பு நுட்பங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் இரத்தினக் கற்களின் வகைகள். இரத்தினக் கற்களை அழகுபடுத்தல் நுட்பங்கள் ஆராயப்பட்டுள்ளன. மேலும் ஆபரண உருவாக்க முறை அதாவது வடிவமைப்பாளர்கள் எவ்வாறு ஆபரண வடிவமைப்புக்களை உருவாக்கின்றனர். வடிவமைப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆபரண பற்றிய தெளிவு இவ்வாய்வில் தயாரிப்பு நுட்பங்கள் ஆராயப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. நகை வடிவமைப்பாளர்களுடனான நேர்காணல் ஆய்வின் தாள் தெரிவிக்கிறது. இது அடிப்படையான கோட்பாடு அணுகுமுறையைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேலும் இலங்கையின் பொருளாதாரத்தில் இரத்தினக்கல், ஆபரண வடிவமைப்பு ஏற்படுத்தும் தாக்கம், அதேபோன்று வடிவமைப்பாளர்கள், வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான பரிந்துரைகளும் இவ்வாய்வில் ஆராயப்பட்டுள்ளன. எனவே இரத்தினக்கல் மற்றும் ஆபரண வடிவமைப்பு, அதன் அழகியல் நுட்பங்கள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து இவ்வாய்வில் தர முயற்சித்துள்ளேன்.