dc.description.abstract |
தமிழக அருங்காட்சியகங்களில் காணப்படும் இந்துப்பண்பாட்டுக் கலைப்பொருட்கள் தொடர்பாக விடயங்களை சென்னை, தஞ்சாவூர் அருங்காட்சியகங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாய்வானது. இந்து பண்பாடு பற்றிய அடிப்படையான விடயங்களை விளக்குகின்றது. பண்பாடு மனித வாழ்விற்கு எத்தகைய பங்கினை வகிக்கின்றது. சீரான சமூக நடத்தைக்கு பண்பாட்டின் இன்றியமையாமை, இந்து பண்பாட்டின் தனித்துவம் ஆராயப்படுகின்றது என்பன
இந்து பண்பாட்டுப் பொருட்கள் இன்று வரை நிலைத்திருக்க பேருதவி புரியும் அருங்காட்சியகங்கள் பற்றியதோர் அறிமுகம், அருங்காட்சியகங்கள் தொடர்பான விளக்கங்கள், வகைகள், அருங்காட்சியக பொருட்களைப் பாதிக்கும் காரணிகள், பொருட்களை பாதுகாக்கும் முறைகள் என்பன ஆராயப்படுகின்றது.
அருங்காட்சியகங்கள் பற்றிய அறிமுகத்தில் கூறப்பட்ட தன்மைகளை கொண்டு விளங்கும் சென்னை மற்றும் தஞ்சாவூர் அருங்காட்சியகங்கள் தொடர்பான விளக்கங்களையும், அங்கு இந்து பண்பாட்டு பொருட்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும், அப்பொருட்கள் வெளிப்படுத்தும் பண்பாட்டு அம்சங்கள் குறித்தும் ஆராயப்படுகின்றது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்து பண்பாட்டுப் பொருட்கள் எவ்வாறான அமைப்பை உடையன, அதன் காலம், சிறப்பு, அவை எவ்வாறு இந்து பண்பாட்டை பிரதிபலிக்கின்றன போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படுகின்றது.
இவ்வாய்வினை மேற்கொள்ள பண்பாடு, அருங்காட்சியகம், சென்னை அருங்காட்சியகம் குறித்த பல நூல்களையும், இணையத்தள முகவரிகளையும் பயன்படுத்தியதோடு. செவ்விக்காணல்களையும் மேற்கொண்டு முழுமையான உண்மை தகவல்களோடு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. |
en_US |